டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகளவில் போட்டி நிலவுகிறது.. இளைஞர்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.. பிரதமர் மோடி உரை!

Google Oneindia Tamil News

டெல்லி: உலக அளவில் பெரிய போட்டி நிலவுகிறது, சர்வதேச வர்த்தக சந்தைக்கு ஏற்றவாறு நாம் நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி பேசி உள்ளார். உலக இளைஞர்கள் திறன் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்

எல்லா வருடமும் ஜூலை 15-ம் தேதி உலக இளைஞர் திறன் தினம் கொண்டாடப்படுகிறது. இதில் ஒவ்வொரு வருடமும் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பை வெளியிடுவது வழக்கம்.

 World Youth Skill Day: Skill, Reskill, Upskill should be the matra for youths says PM Modi

கடந்த 2015ம் வருடம் இதே நாளில்தான் பிரதமர் மோடி ஸ்கில் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் இந்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். தற்போது இந்த திட்டம் தொடங்கி 5 வருடம் ஆகிவிட்டது .

இந்த நிலையில் உலக இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஸ்கில் இந்தியா திட்டம் குறித்தும் மற்ற பல்வேறு திட்டம் குறித்தும் இன்று பிரதமர் மோடி பேசினார்.

Recommended Video

    Google Sundar Pichai Announced a 75,000 crores | India’s Digital Economy

    அதில், உலக அளவில் பெரிய போட்டி நிலவுகிறது. அதில், கொரோனா காலத்தில் சந்தை நிலவரம் வேகமாக மாறி வருகிறது. திறனை வளர்த்துக் கொள்வது மட்டுமே இதற்கு தீர்வாக இருக்கும். சர்வதேச வர்த்தக சந்தைக்கு ஏற்றவாறு நாம் நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

    திறன் மட்டுமே நம்முடைய வலிமை: ஆபத்து காலத்தில் திறன் மட்டுமே உதவும்.கொரோனா தற்போது நமது வேலை செய்யும் முறையை மாற்றியுள்ளது. இதுதான் இனி வேலை செய்யும் முறையாக இருக்க போகிறது. புதிய சூழ்நிலைக்கு ஏற்றபடி நாம் திறன்களை பெருக்கிக் கொள்ள வேண்டும் .

     World Youth Skill Day: Skill, Reskill, Upskill should be the matra for youths says PM Modi

    திறனை வளர்த்துக் கொள்ள வளர்த்துக் கொள்ள அனுபவமும் நமக்கு வளரும். திறனுக்கு வயதிற்கும் நேரத்திற்கும் தொடர்பு இல்லை. திறன் என்பது தனித்துவம் வாய்ந்தது. நாள்பட நாள்பட திறன் அதிகரிக்கவே செய்யும். நம்முடைய திறனை யாராலும் அபகரிக்க முடியாது.

    திறன் என்பது தனிப்பட்டவர்களுக்கு சொந்தமானது. திறன்தான் இளைஞர்களை இயக்கும் சக்தி கொண்டது. புதிதாக திறனை வளர்த்துக் கொண்டால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னேறலாம். மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டு உள்ளார்.

    English summary
    PM Modi to speak with people today in television on world youth day celebration.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X