டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2.5 கோடியை நெருங்கும் ஆக்டிவ் கேஸ்கள். இந்த 5 நாடுகள் மட்டும் சரிபாதி நோயாளிகள்..பட்டியலில் இந்தியா

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,86,295 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தினசரி கொரோனா உயிரிழப்பும் 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

உலகெங்கும் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை!ஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை!

பிரிட்டன், பிரான்ஸ், போலந்து போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் வைரஸ் கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தியுள்ளன. மேலும், தடுப்பூசி பணிகளையும் அனைத்து நாடுகளும் மிகத் தீவிரமாகப் பின்பற்றி வருகின்றன.

 கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

உலகெங்கும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,86,295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா உயிரிழப்பும் 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு 13,59,46,139 ஆகவும் உயிரிழப்பு 29,38,757 ஆகவும் அதிகரித்துள்ளது. அதேபோல கொரோனா காரணமாக உலகெங்கும் தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் 2.36 கோடியாக உயர்ந்துள்ளது.

 இந்தியாவில் உச்சம்

இந்தியாவில் உச்சம்

இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 1,52,682 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் வைரஸ் பாதிப்பு 1,33,55,465 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது 11,07,827 பேர் கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல தினசரி கொரோனா உயிரிழப்பும் 838ஆக அதிகரித்துள்ளது.

Array

Array

இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது. அங்குக் கடந்த 24 மணி நேரத்தில் 69,592 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 2,535 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல நேற்று அமெரிக்காவில் 65,513 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி கொரோனா உயிரிழப்பும் 718 ஆகப் பதிவாகியுள்ளது.

 ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

அத்துடன் பிரான்ஸ் நாட்டிலும் வைரஸ் பாதிப்பும் மெல்ல அதிகரித்து வருகிறது. அங்கு தற்போது தினசரி வைரஸ் பாதிப்பு 41,243 ஆக உள்ளது. உலகெங்கும் தற்போது ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 2,34,94,556 ஆக உள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அமெரிக்கா, பிரான்ஸ், பிரேசில், இந்தியா ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஆக்டிவ் கேஸ்கள் அதிகமாக உள்ளது அந்நாட்டிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு அதிக அழுத்தத்தை அதிகப்படுத்தும்.

English summary
Worldwide Corona update, more than half of the active cases are in USA, France, Brazil, and India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X