உலகம் முழுவதும் வேகமாய் பரவும் கொரோனா.. இதுவரை 334,849,075 பேர் பாதிப்பு.. 5,572,631 பேர் பலி
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவைரஸ் தொற்று பாதிப்பினால் 334,849,075 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 270,600,431 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாறி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகமே இந்த கொரோனாவால் முடங்கி போயுள்ளது... பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
முதன்முதலாக சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா தொற்றானது இன்றைக்கு உலகத்தையே ஆட்டி படைத்து வருகிறது.. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த தொற்றானது பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தியும் வருகிறது... இன்னொரு பக்கம் ஒமிக்ரான் வைரஸ் திடீரென கிளம்பி வந்து மிரட்டி கொண்டிருக்கிறது.
2 நாட்களுக்கு பின் மீண்டும் அதிகரித்த கொரோனா.. தமிழ்நாட்டில் உயர்ந்த கேஸ்கள்.. இன்றைய நிலவரம்!

டிஸ்சார்ஜ்
உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55.72 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,572,631 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்... அதேபோல, உலகம் முழுவதும் கொரோனாவால் 334,849,075 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 270,600,431 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 58,676,013 கவலைக்கிடமான நிலையில் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எண்ணிக்கை
அதில் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்திலும், பிரேசில் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 37 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள்படி, கொரோனா நோய்த்தொற்றில் அமெரிக்கா அடுத்தபடி உலகளவில் 2வது அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருந்து வருகிறது.

உயிரிழப்பு
அமெரிக்காவில் ஒரு நாளில் 463,633 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.. ஒரேநாளில் 1,560 பேர் பலியாகி உள்ளனர்.. இதுவரை அங்கு 43,263,332 பேர் குணமாகி உள்ளனர்.. அமெரிக்காவில் இதுவரை 68,547,857 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 37,896,011 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.. நேற்று ஒரே நாளில் 277,740 கோரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன... 487,226 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.. இதுவரை மட்டும் 35,568,673 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

இறப்பு
இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரேஸில் உள்ளது.. 23,215,551 பேர் இதுவரை அங்கு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.. நேற்று ஒரே நாளில் 132,254 பேருக்கு தொற்று உறுதியாக உள்ளது.. 162 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர்.. பிரேஸிலில் தொற்று எண்ணிக்கை 23,083,297 ஆக உயர்ந்துள்ளது.. அங்கு 621,578 பேர் இதுவரை அங்கு உயிரிழந்துள்ளனர்.. நேற்று மட்டும் 317 பேர் இறந்துள்ளனர்.

ரஷ்யா
ரஷ்யாவில் இதுவரை 10,865,512 பேர் இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,252 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேற்று ஒரேநாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.. அங்கு கொரோனா தொற்றில் இருந்து 98 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.