"பாலின சமத்துவத்திற்கான மையம்.." டெல்லி அருகே அமைத்த எக்எஸ்எல்ஆர்ஐ-சேவியர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்
டெல்லி: பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, எக்ஸ்எல்ஆர்ஐ-சேவியர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், டெல்லி-என்.சி.ஆர் வளாகத்தில் பாலின சமத்துவம் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய தலைமைத்துவத்திற்கான மையத்தை அமைத்து, பொருளாதார ரீதியான நடவடிக்கைகளில் பெண்களை இணைக்க முயற்சி எடுத்துள்ளது.

இந்த ஆண்டு மகளிர் தினத்தையொட்டி, 'தலைமைத்துவத்தில் பெண்கள்: கோவிட் -19 உலகில் சமமான எதிர்காலத்தை அடைதல்' என்ற கருப்பொருள் உருவாக்கப்பட்டது. இதற்கு ஏற்ப, எக்ஸ்.எல்.ஆர்.ஐ சார்பில், சர்வதேச பெண்கள் தினத்தை பாலின சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய தலைமைத்துவத்திற்கான மையத்தை அமைத்துள்ளனர். பொருளாதார நடவடிக்கைகளில் பெண்கள் பங்களிப்பை ஊக்குவிக்கும் களமாக இது மாறியுள்ளது.

ஒரு நிறுவனமாக எக்ஸ்எல்ஆர்ஐ எப்போதும் நாகரிகம், நிலையானதன்மை மற்றும் சமூக தொழில்முனைவோர் போன்ற பல்வேறு விஷயங்களில் முன்னோடியாக இருந்து வருகிறது. இந்த மையம் தொழில் ரீதியாக நன்கு பயிற்சி பெற்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில் பயிற்சியாளர்களின் ஒரு பெரிய குழுவை ஒன்றாக இணைத்து, இந்தியப் பெண்களின் அன்றாட வாழ்க்கையை மாற்றுவதற்கான கண்டுபிடிப்புகளை வடிவமைத்து வரிசைப்படுத்துகின்றனர்.

டெல்லி-என்.சி.ஆர் வளாகம் குர்கானில் இருந்து 45 நிமிட பயணமான ஜஜ்ஜருக்கு அருகில் அமைதியான, 37 ஏக்கர் பசுமையான வளாகத்தில் அமைந்துள்ளது, மேலும் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

புதிய மையத்திற்கு எக்ஸ்.எல்.ஆர்.ஐ.யில் நிறுவன பிகேவியர், உதவி பேராசிரியர் பேராசிரியர் ஸ்ரேயாஷி சக்ரவர்த்தி தலைமை தாங்குவார். அவர் 2017 ஆம் ஆண்டில் HRM பகுதியில் எமரால்டு சிறந்த முனைவர் பட்ட ஆய்வு விருதையும் பெற்றவராகும்.

பேராசிரியர் ஸ்ரேயாஷி சக்ரவர்த்தி, இதுகுறித்து கூறுகையில், "செப்டம்பர் 2020ல் உலக பொருளாதார மன்றம் 14 வது பாலின சமநிலை அறிக்கையை வெளியிட்டது. இந்த ஆராய்ச்சி அறிக்கை ஆபத்தானது - இந்தியா மிகவும் மோசமான இடத்தில் உள்ளது. ஐஸ்லாந்து 82% சதவீதத்தோடு முதல்ல இடத்தில் உள்ளது. இந்தியா 112 வது இடத்தில் உள்ளது - 4 இடங்கள் சரிந்துள்ளோம். பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்க பெண்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. " என்றார்.
Fr. சேவியர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் இயக்குனர் பி கிறிஸ்டி எஸ்.ஜே இதுகுறித்து தெரிவிக்கையில், "அடுத்த 5-10 ஆண்டுகளில் நாட்டு தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் பங்களிப்பை கணிசமாக அதிகரிப்பதே எங்கள் லட்சிய குறிக்கோள். முதல் கட்டமாக, நாங்கள் பாலின சமத்துவம் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய தலைமைத்துவத்திற்கான மையத்தை அமைத்துள்ளோம். 1995 ஆம் ஆண்டில் (25 ஆண்டுகளுக்கு முன்பு) பெண்கள் அதிகாரம் குறித்து கவனம் செலுத்த ஜேசுயிட்டுகள் முடிவு செய்தனர். அந்த ஆண்டில் கையெழுத்திடப்பட்ட முறையான ஆணை மூலம் பெண்களை பணிகளில் அதிகமாக சேர்ப்பதற்கு அவர்கள் உறுதியளித்தனர். " என்றார்.