டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்!

Google Oneindia Tamil News

டெல்லி: தலைமை தகவல் ஆணையராக யஷ்வர்த்தன் சின்ஹா பொறுப்பேற்கவுள்ளார். இவர் 1981 பேட்ஜ் முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரி ஆவார்.

தற்போது இவர் மத்திய தகவல் ஆணையராக இருந்து வருகிறார். அதிலிருந்து தலைமை தகவல் ஆணையராக உயர்வு பெறவுள்ளார்.

தலைமை தகவல் ஆணையராக இருந்து வந்த பிமல் ஜுல்கா ஆகஸ்ட் 27ம் தேதி ஓய்வு பெற்றார்... அது முதல் இந்தப் பதவி காலியாகவே உள்ளது.

Yashvardhan Sinha set to be next Chief information commissioner

இதற்கிடையே, தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு இறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியலுக்கு காங்கிரஸ் கட்சி கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக லோக்சபா காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி, தேர்வில் ஒளிவுமறைவு இல்லை என்று ஆட்சேபனையை பதிவு செய்திருந்தார்.

கடந்த வாரம் இதுதொடர்பாக கூடிய தேர்வுக் குழு உறுப்பினர்களான பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான அதிர் ரஞ்சன் செளத்ரி ஆகியோர் கூடி ஆலோசித்தபோது செளத்ரி தனது ஆட்சேபனையை பதிவு செய்திருந்தார்.

தேஜஸ்வி ஹெலிகாப்டரை முற்றுகையிட்ட கும்பல்.. பீதியில் ஆர்ஜேடி.. பாதுகாப்பு கேட்கிறதுதேஜஸ்வி ஹெலிகாப்டரை முற்றுகையிட்ட கும்பல்.. பீதியில் ஆர்ஜேடி.. பாதுகாப்பு கேட்கிறது

இந்த நிலையில்தான் அடுத்த தலைமை தகவல் ஆணையராக யஷ்வர்த்தன் சின்ஹா பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதேபோல மத்திய தகவல் ஆணையத்தின் இதர காலியிடங்களுக்கும் மத்திய அரசு விரைவில் ஆட்களை நியமிக்கும் என்றும் தெரிகிறது.

மத்திய தகவல் ஆணையர்கள் பதவிகளுக்கு சுபாஷ் சந்திரா, மீனாட்சி குப்தா, இரா ஜோஷி அருண் குமார் பாண்டா, சரோஜ் புன்ஹானி, ஹீராலால் சமரிதான் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

English summary
Yashvardhan Sinha set to be next Chief information commissioner
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X