டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யாசின் மாலிக்கின் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு மத்திய அரசு தடை... அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி:யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி கட்சியை, தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசு தடை செய்துள்ளது.

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான யாசின் மாலிக், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற கட்சியை வழிநடத்தி செல்கிறார். புல்வாமா தாக்குதலை தொடர்ந்து யாசின் மாலிக் உள்ளிட்ட காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பினை மத்திய அரசு விலக்கிக் கொண்டது.

Yasin malik led jklf banned under anti terror law

அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 2ம் தேதி அவர் கைது செய்யப்பட்டு கோதிபாஹ் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார். அத்துடன் 26ம் தேதி அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் தேசிய விசாரனை ஆணையம் சோதனைகளை நடத்தியது.

பாஜக தலைவர்களுக்கு லஞ்சம்.. காங். குற்றச்சாட்டுக்கு எடியூரப்பா மறுப்பு.. முடிந்து போனது என்கிறார் பாஜக தலைவர்களுக்கு லஞ்சம்.. காங். குற்றச்சாட்டுக்கு எடியூரப்பா மறுப்பு.. முடிந்து போனது என்கிறார்

இது ஒரு தன்னிச்சையான கைது நடவடிக்கை என்று ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி கட்சி கண்டித்திருந்தது. இந்நிலையில் அந்த கட்சியை தடை செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் தடை செய்யப்படும் 2வது கட்சி இதுவாகும். முன்னதாக, ஜமாத் இ இஸ்லாமி கட்சியை மத்திய அரசு தடை விதித்திருந்தது.

English summary
The Yasin Malik led Jammu Kashmir Liberation Front was banned by the Centre under anti-terror law.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X