• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது.. யோகி செம்ம ஹேப்பி,. பிரதமர் மோடிக்கு உருக்கமாக நன்றி

Google Oneindia Tamil News

டெல்லி: தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பது போல் மகிழ்ச்சி அடைந்துள்ள யோகி ஆதித்யாநாத், தனக்கு எதிரான பிரச்சனைகளை பிரதமர் மோடி, மற்றும் அமித்ஷாவிடம் கூறி சமாளித்த பின்னர் ட்விட் போட்டுள்ளார். அந்த ட்விட் பதிவில் தன்னை சந்திக்க நேரம் ஒதுக்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு இதயப்பூர்வமாக நன்றி தெரிவித்துள்ளார்.

  Yogi-க்கு நெருக்கம்.. UP முன்னாள் தலைமை செயலாளர்.. தேர்தல் ஆணையர்களில் ஒருவராக Anup Chandra Pandey

  கொரோனா தொற்றை சரியாக கையாளவில்லை, தான் தோன்றித்தனமாக சர்வாதிகாரமாக செயல்படுகிறார் என உத்தரப்பிரதேச பாஜக தலைவர்கள் பலர் யோகிக்கு எதிராக புகார் வாசிக்க தொடங்கியதால், கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் யோகி தலைமையில் மீண்டும் உத்தரப்பிரதேச தேர்தலை சந்திக்கலாமா வேண்டாமா என்கிற அளவிற்கு பாஜக மேலிடம் யோசிக்க தொடங்கியது.

  ஏனெனில் தற்போது மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்க உத்தரப்பிரதேச மாநிலம் தான் முக்கிய காரணம். அங்கு தான் பாஜக அதிக இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைத்தால் தான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு பலமாக இருக்கும் என்பதால், பாஜக மேலிடம் உத்தரப்பிரதேச மாநிலத்தை மிகமிக கவனமாக கையாள்கிறது.

  குறுவை சாகுபடியை அதிகரிப்பதே எங்கள் இலக்கு...மேட்டூர் அணையை திறந்து வைத்து மு.க ஸ்டாலின் பேச்சு குறுவை சாகுபடியை அதிகரிப்பதே எங்கள் இலக்கு...மேட்டூர் அணையை திறந்து வைத்து மு.க ஸ்டாலின் பேச்சு

  என்ன பிரச்சனை

  என்ன பிரச்சனை

  அதனால் தான் யோகி ஆதித்யாநாத்திற்கு எதிராக உத்தரப்பிரதேச பாஜக தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் அடுத்தது பாஜக மேலிடத்திற்கு அனுப்பிய புகார்களை விசாரிக்க தொடங்கியது. அப்படி என்ன தான் உத்தரப்பிரதேசத்தில் பிரச்சனை, எதற்காக அங்குள்ள பாஜக தலைவர்கள் யோகிக்கு எதிராக திரும்பினர் என்பதை பார்ப்போம்.

  ஒன் ​​மேன்-ஷோ

  ஒன் ​​மேன்-ஷோ

  பிரதமர் மோடிக்கு குஜராத்தில் இருந்த இமேஜ் போல் தனக்கு இமேஜ் உருவாக வேண்டும் என்று யோகி விரும்புகிறார். சக்தி வாய்ந்த தலைவராக தன்னை கருதும் யோகி ஆதித்யாநாத் "ஒன் ​​மேன்-ஷோ" ஆக செயல்படுவதாக பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். தங்களின் ஆலோசனைகள் எதையும் கேட்பது, கட்சியினரை அனுசரித்து செல்வது இல்லை. அவருக்கு தோன்றுவதையே செய்கிறார் என்று குமுறுகின்றனர்.

  டெல்லி மேலிடம் யோசனை

  டெல்லி மேலிடம் யோசனை

  யோகிக்கு எதிராக பல விஷயங்களை உள்ளுக்குள்ளேயே வைத்து குமுறிக்கொண்டிருந்த பாஜக நிர்வாகிகளுக்கு கொரோனா இரண்டாவது அலை பெரிய வாய்ப்பாக அமைந்தது. கொரோனாவை கையாள்வதில் முதல்வர் யோகி ஆதித்யாநாத் அரசின் செயல்பாடுகள் சரியில்லை என தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். போதாத குறைக்கு சர்வதேச ஊடகங்கள், தேசிய ஊடகங்கள் பல ஊடகங்கள் உத்தரப்பிரதேசத்தின் சுகாதார கட்டமைப்பையும் யோகி ஆதித்யாநாத் செயல்பாட்டையும் விமர்சித்தன. உச்சகட்டமாக பாஜக நிர்வாகிகளே யோகி தலைமையில் மீண்டும் சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டுமா என்பது டெல்லி மேலிடம் யோசித்து பார்க்க வேண்டும் என்கிற அளவிற்கு புகார்களை வாசிக்க தொடங்கினர்.

  பஞ்சாயத்து தேர்தல்

  பஞ்சாயத்து தேர்தல்


  அண்மையில் நடந்த பஞ்சாயத்து தேர்தல்களில் பாஜகவிற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை இந்துத்துவா ஆதரவு பகுதிகளான அயோத்தி மற்றும் மதுரா போன்றவற்றில் தோல்வி அடைந்ததால் பாஜக மேலிடம் யோகி மீது அதிருப்தி அடைந்தது. இதற்கிடையே மோடியின் வாரிசாக தன்னை நினைத்துக்கொண்டு யோகி செயல்பாடுகிறார் என்கிற அளவிற்கு புகார்கள் பறந்தன.

  விசாரணை நடத்தினார்

  விசாரணை நடத்தினார்

  இப்படி தொடர்ச்சியான புகார்கள் ஆதித்யநாத்திற்கு எதிராக வந்தால் டெல்லி மேலிடம் ஒரு குழுவை லக்னோவுக்கு அனுப்பி, உண்மையை விசாரித்தது. அந்த குழுஅளித்த அறிக்கைக்கு பின்னர் யோகியின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் சூழலும் உருவானது. பாஜக மேலிடம் அவரை டெல்லிக்கு உடனடியாக அழைத்தது. நேற்று பிரதமர் மோடியை சந்தித்து யோகி ஆதித்யாநாத் பேசினார். அப்போது லக்னோவிற்கு சென்ற டீம் கொடுத்த ரிப்போர்ட்டை வைத்துக்கொண்டு அவர் பல்வேறு விஷயங்களை கேட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் கட்சியை வலுப்படுத்த செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசித்ததகாவும் கூறப்படுகிறது. கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்லவும் அறிவுறுத்தியாக கூறப்படுகிறது.

  யோகிக்கு ஆதரவு

  யோகிக்கு ஆதரவு

  பிரதமர் மோடியை சந்தித்த பின்னர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரையும் யோகி ஆதித்யா நாத் சந்தித்தார். இந்த சந்திப்பின் மூலம் யோகி தன் நிலைப்பாட்டை விளக்கி உள்ளார். கடைசியில் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட பாஜக மேலிடம் யோகி ஆதித்யாநாத்தை உத்தரப்பிரதேச மாநில முதல்வர் பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துள்ளது. எனினும் கட்சியின் நிர்வாகிகளை சமாதானம் செய்வதற்காக உபி பாஜகவின் உயர்மட்ட கட்டமைப்பில் முக்கிய மாற்றம் வரலாம் என்கிறார்கள்.

  மோடிக்கு நன்றி

  மோடிக்கு நன்றி

  தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பது போல் மகிழ்ச்சி அடைந்துள்ள யோகி ஆதித்யாநாத், தனக்கு எதிரான பிரச்சனைகளை பிரதமர் மோடி, மற்றும் அமித்ஷாவிடம் கூறி சமாளித்த பின்னர் ட்விட் போட்டுள்ளார். அந்த ட்விட் பதிவில் தன்னை சந்திக்க நேரம் ஒதுக்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு இதயப்பூர்வமாக நன்றி தெரிவித்துள்ளார்.

  English summary
  Uttar Pradesh Chief minister Yogi Adityanath big happy after he met prime minister Modi, he expresses heartfelt thanks to Modi for meet
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X