டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராமர் சிலையை அகற்ற நினைத்தவர்கள் இப்போ ஆதரிக்கிறார்கள்.. யோகி ஆதித்யநாத் காட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: அயோத்தியிலுள்ள குழந்தை ராமர் சிலையை அகற்ற முயன்றவர்கள் இப்போது ஆதரவு அளித்து பேசுகிறார்கள் என்று விமர்சனம் செய்துள்ளார் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அளித்த பேட்டியில் கூறியதாவது: இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் பெருமைமிக்க தருணம். முதல்வர் என்ற முறையில், இந்த விழா தொடர்பான பாதுகாப்புக்கு பொறுப்பேற்றேன், கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொண்ட பணிகளில் இந்த பணியைத்தான் நெருக்கமாக உணர்ந்தேன்.

Recommended Video

    Ayodhya Ram temple கட்ட காரணமான முக்கிய தலைவர்கள்

    காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது அறிக்கையில், ராமர் அனைவருக்கும் சொந்தமானவர் என்று கூறினார், நாங்கள் இதை நீண்ட காலத்திற்கு முன்பே கூறி வருகிறோம்.

    பொது இடங்களில் சமூக இடைவெளி அவசியம்: பிரதமர் மோடி!! பொது இடங்களில் சமூக இடைவெளி அவசியம்: பிரதமர் மோடி!!

    சிலையை அகற்ற முயன்றனர்

    சிலையை அகற்ற முயன்றனர்

    இவர்களில் சிலர் குழந்தை ராமரின் சிலையை அகற்றுவதற்கு முயன்றனர். ஆனால், இப்போது ராமர் பெயரை முழக்கமிடுகிறார்கள். உண்மையான இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் சிலையை நிறுவ அவர்கள் விரும்பினர். ராமர் அனைவருக்கும் சொந்தமானவர் என்று நாங்கள் நம்புகிறோம். ராமரின் பணியில் அனைத்து மக்களும் ஒத்துழைக்க வேண்டும். ஆனால் ராமர் பெயரில் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கக்கூடாது. அனைவரையும் இணைக்க நாங்கள் பணியாற்றியுள்ளோம்.

    ராமர் பெயரில் அரசியல் செய்யவில்லை

    ராமர் பெயரில் அரசியல் செய்யவில்லை

    ராமர் பெயரில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. 1984 ஆம் ஆண்டில் நாங்கள் ராமர் கோவில் மீது வைத்திருந்த விசுவாசம், 2020லும் அதே மாதிரித்தான் உள்ளது. ஆனால் இப்போது ராமர் விஷயத்தில் அரசியல் லாபம் தேடுவோர், நேரத்திற்கு நேரம் மாறி செயலாற்றுகிறார்கள். 1949ல் அவரது உணர்வுகள் என்ன? 1984ல் அது எப்படி இருந்தது, 1992ல் அது எப்படி இருந்தது என்பதை நாம் பார்த்து வருகிறோம். நாங்கள் சொன்னதைச் செய்தோம். இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

    மோடி பங்கேற்பு

    மோடி பங்கேற்பு

    அயோத்தியில் நடந்த பூமி பூஜை நிகழ்ச்சிக்கு, பிரதமர் நரேந்திர மோடி உட்பட சுமார் 175 பேர் அழைக்கப்பட்டனர். இதில் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பிற கட்சி தலைவர்கள்

    பிற கட்சி தலைவர்கள்

    பூமி பூஜை நிகழ்ச்சிக்கு மற்ற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் ஏன் அழைக்கப்படவில்லை என்ற கேள்விக்கு, யோகி ஆதித்யநாத், அளித்த பதிலில் "நாங்கள் அனைவரையும் அழைக்க விரும்பினோம், ஆனால் நம் நாட்டில் உள்ள கொரோனா வைரஸ் நிலவரத்தை பார்த்துவிட்டு, சுமார் 200 பேரை மட்டுமே அழைக்க முடிந்தது. பாஜக தலைவர்கள் பலர் கூட இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இல்லை. பாஜக தேசிய தலைவர் கூட வரவில்லையே " என்றார் யோகி ஆதித்யநாத்.

    English summary
    Uttar Pradesh Chief Minister Yogi Adityanath said that it was a very emotional and proud moment for me. As CM I took responsibility for the security of UP and I have felt this work very closely for the last three years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X