• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஜூலை 1 முதல் புது ரூல்ஸ்.. வாகனங்களை ஓட்டிக் காட்டாமலே டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு புதிய விதிமுறை வருகிற ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது. இதன்படி உரிய பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவராக இருந்தால், வாகனத்தை ஓட்டிக் காட்டாமலே லைசென்ஸ் பெறலாம்.

இந்தியாவில் திறன் வாய்ந்த டிரைவர்களுக்கான பற்றாக்குறை இருக்கிறது. சாலை விதிகள் பற்றிய புரிதல் இல்லாமல் விபத்துகள் அதிகரிக்கின்றன.

எனவே திறமையான டிரைவர்களை உருவாக்க அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சி மையங்களை உருவாக்க அரசு, நடவடிக்கை எடுத்துள்ளது.

ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிக்க மேலும் 3 மாதம் அவகாசம்.. மத்திய அரசு அறிவிப்பு ! ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிக்க மேலும் 3 மாதம் அவகாசம்.. மத்திய அரசு அறிவிப்பு !

 இப்போது உள்ள நடைமுறை

இப்போது உள்ள நடைமுறை

அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி பள்ளிகளில் ஓட்டுனராக, பயிற்சி பெற்றவர்கள், ஆர்.டி.ஓ எனப்படும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வாகனத்தை முறையாக ஓட்டினால் மட்டுமே தற்போது வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறைகளில்தான், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மாற்றங்களை செய்துள்ளது.

 கட்டமைப்பு தேவை

கட்டமைப்பு தேவை

புதிய விதிகளின்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள், 2 ஏக்கர் பரப்பளவில் பயிற்சி எடுப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை கண்டிப்பாக உருவாக்க வேண்டும். அவர்களிடம் பயிற்சி வாகன வடிவமைப்புடன் கூடிய வசதிகள் இருக்க வேண்டும். டிரையினிங் கொடுப்பவர் கண்டிப்பாக, மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றவராக இருக்க வேண்டும்.

மலைப் பகுதி

மலைப் பகுதி

போக்குவரத்து குறியீடுகள், போக்குவரத்து விதிமுறைகள், வாகன கட்டமைப்பு, பொதுத் தொடர்பு, முதலுதவி உள்ளிட்டவை குறித்த வகுப்புகளை அவர்கள் நடத்த வேண்டும். வாகனங்களை ஒரே மாதிரி நிலப்பரப்பில் மட்டுமே ஓட்டக் கற்றுக் கொடுக்க கூடாது. மலை, கிராமம், நகரம், மேடு, பள்ளம் போன்ற பல்வேறு அமைப்புகளில் கற்பிக்க வேண்டும்.

வாகனம் ஓட்டிக் காட்ட தேவையில்லை

வாகனம் ஓட்டிக் காட்ட தேவையில்லை

இதுபோன்ற தீவிர பயிற்சிகளுக்கு பிறகு, சென்சார் பொருத்தப்பட்ட பிரத்யேக ஓடு பாதையில் வாகனம் ஓட்டும் சோதனை நடத்தப்பட வேண்டும். அது வீடியோவாக பதிவு செய்யப்பட வேண்டும். அதில் வெற்றி பெறுவோர், சான்றிதழ்களுடன் ஆர்.டி.ஓ அலுவலகம் சென்று, வாகனம் ஓட்டிக் காட்டாமலேயே லைசென்ஸ் பெறலாம். இந்த புதிய நடைமுறை, ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

வசதிகள் வேண்டும்

வசதிகள் வேண்டும்

இதுகுறித்து மத்திய போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த அனைத்து வகையான பயிற்சிகளும், மனிதர்களின் தலையீடு இல்லாமல் முழுக்க, முழுக்க தொழில்நுட்பத்தின் கீழ் செய்யப்படும். எனவே இதற்கு உரிய இடவசதி, வாகனங்களை இயக்குவதற்கான ஓடுதள வசதி, தகவல் தொழில் நுட்பங்கள், பயோமெட்ரிக் சிஸ்டம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் கொண்ட பயிற்சிப் பள்ளிகளுக்கு மட்டும்தான் இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

எதற்காக புதிய நடைமுறை

எதற்காக புதிய நடைமுறை

லஞ்சம் கொடுத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லைசென்ஸ் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இதுபோன்ற கடுமையான விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம். மேலும், முன்பைவிட இப்போது பயிற்சியின்போது பலவகையான ஓடு தளங்களில் வெவ்வேறு இடங்களில் வாகனங்களை இயக்கி டிரைவர்கள் பயிற்சி பெற வேண்டியது கட்டாயம் என்பதால், லைசென்ஸ் பெறும்போது அவர்கள் முழுமையான திறமைசாலிகளாக வெளியே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மக்களே, உரிய அங்கீகாரம் பெற்ற பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சி பெற்றவர்கள், நேரடியாக கையை வீசிக் கொண்டு ஆர்டிஓ ஆபீஸ் போய் லைசென்ஸ் வாங்கிவிட்டு வரலாம்.

English summary
The new rules for obtaining a driver's license will come into effect from July 1. Accordingly, if you are trained in the relevant training centers, you can get a license without driving test.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X