டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"உங்களால் அதை செய்ய முடியாது".. திரைப்பட வாக்கியத்தை வைத்து மோடியை ஓட்டிய காங்கிரஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 26-ம் தேதி வாரணாசியில், பத்திரிகையாளர்களை சந்தித்து பொதுவெளியில் பேச உள்ளதாக நேற்று ஒரு சில ஊடகங்களில் தகவல் வெளியானது.

பிரதமர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக வெளியான தகவலை வைத்து மோடியையும், பாரதிய ஜனதா கட்சியையும் காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது.

You can not do that.. Congress mocking Prime Minister Modi

இது குறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு ஒன்றில், கேங்க்ஸ் ஆஃப் வாஸ்ஸிபூர் திரைப்படத்தில் இருந்து பிரபலமான வரியை குறிப்பிட்டுள்ளது. மேற்கண்ட திரைப்படத்தில் பிரபலமான "Tum se na ho payega" என்ற வாசகத்தை வைத்து பிரதமர் மோடியை கிண்டல் செய்துள்ளது

இந்த இந்தி வாக்கியத்திற்கு " உங்களால் அதை செய்ய முடியாது" என்று அர்த்தமாகும். மோடி பிரதமராக பதவியேற்றதிலிருந்து ஒருமுறை கூட பத்திரிகையாளர்களை திறந்த வெளியில் சந்தித்து இல்லை.

பிரதமர் மோடி மீது விதிமீறல் புகார் மாயம்... 'சிறிய தடுமாற்றம்' என சமாளித்த தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி மீது விதிமீறல் புகார் மாயம்... 'சிறிய தடுமாற்றம்' என சமாளித்த தேர்தல் ஆணையம்

அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசியதில்லை என எதிர்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன. ஆயினும் பிரதமர் மோடி சில பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டிகளும் கூட பிரதமரிடம் கடினமான கேள்விகள் கேட்கப்படவில்லை என்பதற்காக எதிர்கட்சியினரின் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளன.

நடிகர் அக்ஷய் குமாருடன் சிறப்பு பேட்டி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற மோடியை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி கடுமையாக நேற்று விமர்சித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

English summary
The Congress has mocked Modi and the Bharatiya Janata Party with the release of reports that the Prime Minister was meeting journalists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X