டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதை செய்யுங்கள் கொரோனா வைரஸ் உங்க கிட்டயே வராது.. உலக பிரபல மருத்துவரின் டிப்ஸ்!

Google Oneindia Tamil News

டெல்லி: முகத்தில் கை வைக்காமல் இருந்தாலே கொரோனா பாதிப்பிலிருந்து 40 சதவீதம் தப்பிக்கலாம் என வைரஸ் நோய்கள் ஆராய்ச்சி நிபுணர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Corona Virus Symptoms | Precautions

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. உயிரை குடிக்கும் வைரஸ் நோயானது 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

    இந்த நோய் சீனா, தென்கொரியா, இத்தாலி, ஈரான், டயமன்ட் பிரின்சஸ். ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், சிங்கப்பூர், அமெரிக்கா, ஹாங்காங், குவைத், பிரிட்டன், மலேஷியா, பஹ்ரைன், ஆஸ்திரேலியா, தாய்லாந்து, ஸ்விட்சர்லாந்து, ஈராக், கனடா, ஸ்வீடன், இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், நார்வே, ஆஸ்திரியா, நெதர்லாந்து, வியட்னாம், லெபனான் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.

    பண நோட்டுகள், காசுகள் மூலமும் கொரோனா பரவும்.. கவனம்.. ஹு விடுத்த எச்சரிக்கை.. இப்படி ஒரு சிக்கலா!? பண நோட்டுகள், காசுகள் மூலமும் கொரோனா பரவும்.. கவனம்.. ஹு விடுத்த எச்சரிக்கை.. இப்படி ஒரு சிக்கலா!?

    விளம்பரங்கள்

    விளம்பரங்கள்

    சாதாரண காய்ச்சல் வந்தாலே கொரோனா காய்ச்சல் என்ற அச்சம் பலருக்கு இருக்கிறது. இதுவரை இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் உயிரிழப்பு என்பது உறுதியாகிவிட்டது. இந்த நோய் வராமல் தற்காத்து கொள்வது குறித்து அனைத்து சுகாதார நிலையங்களிலும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    கைகளை 20 வினாடிகள் நன்றாக சோப்பு போட்டு கழுவுதல். இருமும் போதும் தும்மும் போதும் கைகுட்டையாலோ அல்லது துணியாலோ வாயை மூடி கொண்டு செய்தல், உடல்நலம் பாதித்தவரின் பொருட்களை தொடாமல் இருத்தல், உடல் நலம் பாதிக்கப்பட்டவரை தொடாமல் பேசுதல். கைகளை கழுவாமல் மூக்கு, வாய், கண்களில் கைகளை வைக்காமல் இருத்தல் என பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகள் கூறப்படுகின்றன.

    தனிமை

    தனிமை

    இந்த நிலையில் வைரஸ் நோய் குறித்து ஆய்வு செய்யும் டாக்டர் டபிள்யூ லேன் லிப்கின் கூறுகையில் ஒரு நாளைக்கு மக்கள் 100 முறையாவது முகத்தை தொட்டுக் கொள்வர். அதை செய்யக் கூடாது. உங்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக உணர்ந்தீர்கள் என்றால் நீங்களே உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். உலகில் உள்ள வைரஸ்களில் மிகவும் பரவும் வைரஸ்களில் கொரோனா வைரஸ் ஒன்று.

    வைரஸ்

    வைரஸ்

    பஸ், ரயில், விமானம் உள்ளிட்ட பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் கைகளில் கையுறை அணிந்து கொண்டு பயணம் செய்ய வேண்டும். முகத்தை தொடாமல் இருந்தாலே இந்த நோயிலிருந்து 40 சதவீதம் தற்காத்து கொள்ளலாம். கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் உங்கள் ரத்த பிளாஸ்மாவை பிளாஸ்மா பேங்குகளில் கொடுக்கவேண்டும். அது கொரோனா வைரஸுக்கு சிகிக்சை அளிக்க சிறந்ததாக இருக்கும். இந்த பிளாஸ்மாக்களில் கொடிய நோய்களுக்கான எதிர்ப்பு சக்தி நிறைய இருக்கும் என்றார்.

    English summary
    Virologist Dr W lan Lipkin says that u just do this, u can prevent Coronavirus infection by 40%.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X