டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அசிங்கமா பேசிட்டு.. எஸ்கேப் ஆக முடியாது.. மன்னிப்பு கேளுங்கள்.. லோக்சபாவில் ஸ்மிரிதி இராணி பகீர்!

நேற்று லோக்சபாவில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்பி ஆஸம் கான் பாஜக எம்பி ராமா தேவியை பார்த்து தவறான முறையில் பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: நேற்று லோக்சபாவில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்பி ஆஸம் கான் பாஜக எம்பி ராமா தேவியை பார்த்து தவறான முறையில் பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. இதற்கு பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இராணி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நேற்று லோக்சபாவில் முத்தலாக் தடை மசோதா மீதான விவாதம் நடைபெற்று வந்தது. அப்போது பாஜக எம்பி ராமா தேவி சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து இருந்தார்.

அப்போது எழுந்து பேசிய சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்பி ஆஸம் கான், பாஜக எம்பி ராமா தேவியை தவறாக வர்ணிக்க தொடங்கினார். தொடக்கத்தில் அவர் விளையாட்டாக பேசுகிறார் என்றுதான் எல்லோரும் நினைத்தனர்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் போக போக அவர் தவறாக பேச தொடங்கினார். முக்கியமாக பாஜக எம்பி ராமா தேவியை பார்த்து, நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். உங்கள் முகம் பிடித்துள்ளது. உங்கள் கண்களை பார்த்து என்னால் பேச முடியவில்லை, என் இதயம் உடைகிறது., என்று காதலன் பேசுவது போல ஆஸம் கான் பேசிக்கொண்டே சென்றார்.

கோபம் அடைந்தார்

கோபம் அடைந்தார்

முதலில் இதை இயல்பாக கேட்ட ராமா தேவி பின் கோபம் அடைந்தார். அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அப்போதே குறிப்பிட்டார். அவரை தொடர்ந்து அவையில் இருந்த பெண் அமைச்சர்கள் எல்லாம் எழுந்து நின்று, ஆஸம் கானுக்கு எதிராக பேச தொடங்கினார்கள்.

என்ன பலர்

என்ன பலர்

அதன்பின் வரிசையாக திரிணாமுல், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்பிக்களும் எழுந்து ஆஸம் கானுக்கு எதிராக பேசினார்கள். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. பாஜகவை சேர்ந்த சில ஆண் எம்பிக்களும் இவருக்கு எதிராக கடுமையாக பேச தொடங்கினார்கள்.

மிக அசிங்கம்

மிக அசிங்கம்

இந்த நிலையில் இதற்கு எதிராக பேசிய பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இராணி தனது பேச்சில், ஒரு பெண்ணை அசிங்கமாக பேசிவிட்டு அவர் இப்படி செல்ல முடியாது. எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அவர் இன்று பேசியது எவ்வளவு தவறான விஷயம் தெரியுமா ? எப்படி ஒரு பெண்ணை அவர் லோக்சபாவில் இப்படி அசிங்கமாக பேச முடியும்.

வெளியே

வெளியே

இது ஈவ் டீசிங். இதையே அவர் வெளியே செய்து இருந்தால் என்ன நடந்து இருக்கும் தெரியுமா. அவரை இந்நேரம் போலீஸ் கைது செய்திருக்கும். அவர் மீது வழக்குகள் பாய்ந்து இருக்கும். அவர் மீது இப்போதே சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு அவர் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும், என்று ஸ்மிரிதி இராணி குறிப்பிட்டுள்ளார்.

English summary
You cannot misbehave and juts walk away says Smriti Irani to Azam Khan in Lok Sabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X