டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் மனஅழுத்தம்... இந்த வயதினர்தான் அதிகம்... 665% அதிகரிப்பு... அதிர்ச்சி ரிப்போர்ட்!!

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் மனநலம் சார்ந்த கேள்விகள் 21-30 இடைப்பட்ட வயதினரிடம் இருந்து 665% அதிகரித்து இருப்பதாக இந்தியாவின் முன்னணி சுகாதார நிறுவனமான ப்ராக்டோ டெலிமெடிசன் ஆப் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ப்ராக்டோ டெலிமெடிசன் ஆப் சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொண்டு இருந்தது. அந்த ஆய்வில் எந்த வயதில் இருப்பவர்கள் அதிகளவில் மனரீதியிலான கேள்விகள் கேட்டுள்ளனர் என்பதுதான். 21-30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் அதிகளவில் மன ரீதியிலான கேள்விகளை கேட்டுள்ளனர். இந்த சதவீதம் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 665% அதிகம் என்று தெரிய வந்துள்ளது. இது கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகமாகும்.

NEET Exam 2020: நீட் தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் 14ல் தேர்வு நடத்துங்கள் - உச்ச நீதிமன்றம் NEET Exam 2020: நீட் தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் 14ல் தேர்வு நடத்துங்கள் - உச்ச நீதிமன்றம்

மன மாற்றம்

மன மாற்றம்

இந்த வயதினரிடம் இருந்து அதிகளவில் கவலை, மன அழுத்தம் மற்றும் பீதியுடன் கலந்த பயம் தொடர்பான கேள்விகள்தான் அதிகளவில் பெறப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு சதவீதம் பேருக்கும் கடந்த ஆறு மாதங்களில் மன அழுத்தத்தில் மாற்றம், அடிக்கடி மன நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த ஆய்வை ப்ராக்டோ ஹெல்த் இன்சைட்ஸ் அக்டோபர் 2019 முதல் செப்டம்பர் 2020க்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தி இருந்தது.

சென்னை

சென்னை

மெட்ரோ நகரங்கள் இல்லாத இடங்களில் இருந்து 35% பேரும், மெட்ரோ நகரங்களில் இருந்து 65% பேரும், 70% ஆண்களும், 30% பெண்களும் மனநலம் தொடர்பான கேள்விகளையும் கேட்டுள்ளனர். பெரும்பாலான கேள்விகள் பெங்களூரு நகரில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லி என்சிஆர், மும்பை, ஐதராபாத், சென்னை, புனே, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து கேட்கப்பட்டுள்ளன.

எங்கு அதிகம்

எங்கு அதிகம்

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் மெட்ரோ இல்லாத நகரங்களில் 1200% அளவுக்கு அதிகமான கேள்விகளும், மெட்ரோ நகரங்களில் இருந்து 500% அளவுக்கும் அதிகமாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மெட்ரோ அல்லாத நகரங்கள் பட்டியலில் சண்டிகர், புவனேஸ்வர், லக்னோ, ஜெய்பூர், ஹூப்ளி, கான்பூர், அகமதாபாத் ஆகிய இடங்களில் இருந்து அதிகமாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

கேள்விகள்

கேள்விகள்

இந்த ஆய்வில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 180% சதவீதம் அளவிற்கு அதிகமாக மனநலம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. தனிமை, கவலை, துக்கம் காரணமாக காம்ப்ளக்ஸ் எமோஷன்ஸ் ஏற்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உதவி

உதவி

இதுகுறித்து ப்ராக்டோ தலைமை ஹெல்த்கேர் திட்ட அதிகாரி டாக்டர் அலெக்சாண்டர் குருவில்லா அளித்திருக்கும் பேட்டியில், ''மனநலத்துடன் தொடர்புடைய எதிர்மறை களங்கத்தை குறைப்பது முக்கியம். மனநல சுகாதாரத்தில் டெலிமெடிசின் முக்கிய பங்கு வகிக்கிறது. சரியான நேரத்தில் பேசுவதும், உதவுவதும் முக்கியமான் ஒன்றாகும். மக்களை கேள்விகள் கேட்க ஊக்குவிப்பதுதான் எங்களது நோக்கம். இதன் மூலம் அவர்களது தனித்துவம் பாதுகாக்கப்படும். அவர்களுக்கு ஆலோசனையும் வழங்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

English summary
Young adults account for 60% of all mental health queries: Practo Insights
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X