டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர வைத்த ரெஹான்

சிங்கத்துக்கு கை குலுக்கிய இளைஞரின் வீடியோ வைரலாகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    Man Sits Face-To-Face With Lion At Enclosure In Delhi Zoo

    டெல்லி: இவருக்கு எவ்ளோ தில் பார்த்தீங்களா.. எங்க போயி.. யாரு பக்கத்துல உட்கார்ந்து இருக்கிறார் பாருங்க.. இந்த திகில் வீடியோதான் இப்போது வைரலாகி வருகிறது.

    சிங்கத்தை போட்டோவுல பார்த்திருப்பே.. சினிமாவுல பார்த்திப்பே.. டிவியில் பார்த்திருப்பே.. ஏன் கூண்டுல கூட பார்த்திருப்பே.. கம்பீரமா காட்டுல பாத்திருக்கியா..ன்னு கேட்டாரு நடிகர் சூர்யா.. இதெல்லாம் கேட்ட சூர்யா, இப்படி பார்த்திருப்பியான்னு கேட்கவே இல்லை.

    ஆனா, அப்படி ஒரு காட்சிதான் நமக்கு வீடியோவாக இப்போகி வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்து போவார்கள்.. தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்து மகிழ்வார்கள்.. அந்த வகையில் ஒரு இளைஞரும் அங்கு வந்தார்.

    சிங்கம்

    சிங்கம்

    கருப்பு பனியன் அணிந்துள்ளார். வந்தவர் நேராக, சிங்கம் இருந்த இடத்தை நோக்கி சென்றார். ஆனால் மக்களின் பாதுகாப்புக்காக ஊழியர்கள் தடுப்பு இரும்பு வேலிகளை அமைத்திருந்தனர். ஆனால், வந்த இளைஞர், அதையும் தாண்டி எகிறி குதித்து உள்ளே போனார்.

    பெரிய கல்

    பெரிய கல்

    அங்கே ஒரு சிங்கம் நின்றிருந்தது. நேராக அந்த சிங்கத்திடம் போய் அதனுடன் விளையாட ஆரம்பித்துவிட்டார். பிறகு அந்த சிங்கம் பக்கத்தில் ஒரு கல் இருந்தது. அந்த கல் மேல் உட்கார்ந்து கொண்டு, சிங்கத்தையே கிட்டபோய் பார்த்து கொண்டிருந்தார். ஆனால் அவரைப் பார்த்த அந்த ஆண் சிங்கமோ திடீரென தாக்க முயல்கிறது.

    அலறினர்

    அலறினர்

    இதையெல்லாம் அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து அலறி கூச்சலிட்டு கொண்டிருந்தனர். ஆனால் இளைஞர் எதையுமே காதில் வாங்காமலேயே சிங்கத்துடன் விளையாடி கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சிங்கத்துக்கு கை கொடுக்க முயல்கிறார். ஆனால் சிங்கம் சற்று பின்னோக்கி நகர்கிறது. சிங்கத்தை இவர் பார்த்துக்கொண்டே இருக்க.. சிங்கமும் அந்த இளைஞரைப் பார்த்துக் கொண்டிருந்தது. இதை ஒருசிலர் வீடியோவிலும் பதிவிட்டு கொண்டனர்.

    கவனம்

    கவனம்

    உடனடியாக அங்கிருந்தவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் சொல்ல.. விரைந்து வந்த அவர்கள், மாமிசத் துண்டை ஒன்றை வீசி சிங்கத்தின் கவனத்தை திசைதிருப்பினார்கள். அதன்பிறகு, சிங்கம் அங்கிருந்து நகர்ந்து சென்றது. இப்போது மரத்தின் அடியில் உட்கார்ந்திருந்த இளைஞரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

    வீடியோ

    வீடியோ

    விசாரணையில், அந்த இளைஞர் ரெஹன் கான், வயது 28 என்பதும், பீகாரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. ஆனால் இவர் மனநலம் பாதிக்கப்பட்டவராம். இந்த தில் வீடியோதான் இப்போது வைரலாகி வருகிறது.

    English summary
    a man sits face to face with lion and tries to give handshack in delhi zoo and rescued by police. this shocking video goes viral now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X