டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊழலை பொறுத்து கொள்ள கூடாது என்பதே புதிய இந்தியாவின் கொள்கை: பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: ஊழலைப் பொறுத்து கொள்ளக் கூடாது என்பதுதான் புதிய இந்தியாவின் கொள்கை என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

குஜராத் மாநிலம் கெவாடியால் மத்திய கண்காணிப்பு ஆணையம் மற்றும் சிபிஐ கூட்டு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் முன்னேற்றம், மக்கள் கவலை மற்றும் மக்கள் நலன் அடிப்படையில், நிர்வாகத்தை அமைக்க அதிகளவிலான முன்னுரிமை அளித்த சர்தார் படேல் சிலை இருக்கும் கெவாடியாவில் இந்த மாநாட்டின் விவாதம் நடக்கிறது. இன்று விடுதலையின் வைர விழா காலத்தில், மிகப் பிரம்மாண்ட இலக்குகளை அடைவதை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கும்போது, மக்களுக்கு ஆதரவான மற்றும் செயல்திறன் மிக்க நிர்வாகம், உங்கள் நடவடிக்கை சார்ந்த விடா முயற்சி ஆகியவை சர்தார் சாகிப்பின் லட்சியங்களுக்கு பலம் அளிக்கும்.

ரேஸில் 6 பேர்.. அவரையும் விட்டு வைக்காத சிஎஸ்கே மேலிடம்.. தோனிக்கு பின் கேப்டனாக போவது யார்? ரேஸில் 6 பேர்.. அவரையும் விட்டு வைக்காத சிஎஸ்கே மேலிடம்.. தோனிக்கு பின் கேப்டனாக போவது யார்?

நாட்டில் அனைத்து இடங்களிலும் ஊழலை ஒழிக்க சிபிஐ மற்றும் மத்திய கண்காணிப்பு அதிகாரிகள் தங்களை மீண்டும் அர்ப்பணிக்க வேண்டும். மக்களின் உரிமையை ஊழல் பறிக்கிறது, அனைவரும் நீதியை நாடுவதற்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் தடையாக இருக்கிறது மற்றும் நாட்டின் ஒட்டு மொத்த சக்திக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஊழலை கட்டுப்படுத்துவதில் வெற்றி

ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு சாத்தியமான நம்பிக்கையை ஏற்படுத்துவதில் கடந்த 6-7 ஆண்டுகளில் அரசு வெற்றியடைந்துள்ளது. இடைத்தரகர்கள் மற்றும் லஞ்சம் இல்லாமல் அரசு திட்டப் பயன்களை மக்கள் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஊழல் செய்பவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எங்கு சென்றாலும் தப்ப முடியாது என மக்கள் தற்போது உணர்கின்றனர். முன்பு, அரசுகள் மற்றும் அரசு நடைமுறைகள் செயல்பட்ட விதத்தில் அரசியல் மற்றும் நிர்வாக உறுதிதன்மை குறைவாக இருந்தது. இன்று ஊழலைத் தாக்கும் அரசியல் உறுதி உள்ளது மற்றும் நிர்வாக அளவில் தொடர்ச்சியான முன்னேற்றம் மேற்கொள்ளப்படுகிறது.

எது புதிய இந்தியா?

எது புதிய இந்தியா?

இன்று, 21-ம் நூற்றாண்டு இந்தியா, நவீன சிந்தனையுடன், மனித குல பயன்பாட்டுக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது. புதிய இந்தியா கண்டுபிடிக்கிறது, முயற்சிக்கிறது, அமல்படுத்துகிறது. அரசு நடைமுறையில் ஊழலை ஏற்றுக்கொள்ள புதிய இந்தியா எப்போதும் தயாராக இல்லை. அரசு நடைமுறை, வெளிப்படைத்தன்மையுடனும், திறம்பட இருக்கவும், மற்றும் சமூகமான நிர்வாகத்தையும் புதிய இந்தியா விரும்புகிறது. அரசு நடைமுறைகளை எளிதாக்குவதன் மூலம், சாதாரண மக்களின் வாழ்வில் அரசு தலையீட்டைக் குறைக்கும் பணியை தனது அரசு மேற்கொண்டது. மக்களுக்கு அதிகாரம் அளிக்க, நம்பிக்கை மற்றும் தொழில்நுட்பத்தை அரசு வலியுறுத்துகிறது. இந்த அரசு மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது. அதனால்தான், ஆவணங்களை சரிபார்க்கும் பல நடைமுறைகள் அகற்றப்பட்டுள்ளன. பிறப்பு சான்றிதழ், ஓய்வூதியத்துக்கான ஆயுள் சான்றிதழ் போன்றவை இடைத்தரகர்கள் இல்லாமல் தொழில்நுட்பம் மூலம் வழங்கப்படுகின்றன. குரூப் சி மற்றும் குரூப் டி பணியிடங்களுக்கான நேர்காணல் முறைகள் நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமையல் எரிவாயு முன்பதிவு முதல் வரிதாக்கல் வரை முகமில்லா நடைமுறை மற்றும் ஆன்லைன் நடைமுறைகள் ஊழல் சம்பவங்களை குறைக்கின்றன.

வெளிப்படைத் தன்மை

வெளிப்படைத் தன்மை

இந்த நம்பிக்கை மற்றும் தொழில்நுட்ப அணுகுமுறை திறமையான நிர்வாகத்தை வலுப்படுத்தி, தொழில் செய்வதை எளிதாக்கியுள்ளது. அனுமதிகள் மற்றும் இணக்கங்கள் போன்ற பழைய வழக்கொழிந்த விதிமுறைகள் அகற்றப்பட்டுள்ளன. அதேநேரத்தில், தற்போதைய சவால்களுக்கு ஏற்ற வகையில் பல கடுமையானச் சட்டங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. இன்னும் பல இணக்கத் தேவைகளை திட்டமிடப்பட்டுள்ளன. பெரும்பாலான அனுமதிகள் மற்றும் இணங்கங்கள் முகமில்லா நடைமுறைகளாகவும், சுய மதிப்பீடு மற்றும் சுய-அறிவிப்பு முறையாக மாற்றுவது ஊக்குவிக்கப்படுகிறது. அரசின் மின்னணுச் சந்தை மின்னணு-ஒப்பந்த முறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்துள்ளது. டிஜிட்டல் அடையாள நடைமுறைகள், விசாரணையை எளிதாக்கியுள்ளன. இந்த நம்பிக்கை மற்றும் தொழில்நுட்ப பயணத்தில், ஊழல் தடுப்பு அமைப்புகள் மற்றும் மத்திய கண்காணிப்பு , சிபிஐ அதிகாரிகளின் மீது நாட்டின் நம்பிக்கை முக்கியமானது.

நமது லட்சியம் எது?

நமது லட்சியம் எது?

நாடு முதலில் என்ற லட்சியத்தை நாம் எப்போது முன்னணியில் வைத்திருக்க வேண்டும். பொது மக்கள் நலன் குறித்த நமது பணியை உறைகல் மூலம் நாம் எப்போதும் தீர்மானிக்க வேண்டும். இவற்றை நிறைவேற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு தான் எப்போதும் ஆதரவு அளிப்பேன். எச்சரிக்கையுடன் ஊழல் தடுப்பை ஏற்படுத்த முடியும் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் அனுபவம் மூலம் ஊழல் தடுப்பு முறையை வலுப்படுத்த முடியும். ஊழல்தடுப்புக்கு தொழில்நுட்பத்துடன் எச்சரிக்கை, எளிமை, தெளிவு, வெளிப்படைத்தன்மை ஆகியவை வெற்றிகரமானதாக இருக்கும். இது நமது பணியை எளிதாக்கும் மற்றும் நாட்டின் வளங்களை பாதுகாக்கும்.

ஊழலை பொறுத்து கொள்ள முடியாது

ஊழலை பொறுத்து கொள்ள முடியாது

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அச்சப்பட வேண்டாம். நாட்டை மற்றும் நாட்டு மக்களை ஏமாற்றும் யாரும் எங்கும் பாதுகாப்பாக இருக்க கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். அரசு நடைமுறை பற்றி பயப்படுவதை ஏழை மக்கள் மனதில் இருந்து அகற்ற வேண்டும். தொழில்நுட்பச் சவால்கள் மற்றும் இணைய வழிக் குற்றங்கள் பற்றி விவாதிக்க வேண்டும். புதிய இந்தியாவுக்குத் தடையாக இருக்கும் நடைமுறைகளை மத்திய கண்காணிப்பு ஆணையம், சிபிஐ மற்றும் இதர ஊழல் தடுப்பு அமைப்புகள் அகற்ற வேண்டும். ஊழலைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்ற புதிய இந்தியாவின் கொள்கையை நீங்கள் வலுப்படுத்த வேண்டும். அரசு நடைமுறை நோக்கி மக்கள் நெருங்கி வரும் சட்டங்களை நீங்கள் அமல்படுத்த வேண்டும் மற்றும் அரசு நடைமுறையில் இருந்து ஊழல் வெளியேற வேண்டும்'.

English summary
Prime Minister Narendra Modi said that "You need to strengthen New India’s policy of zero tolerance for corruption. You need to implement laws in a way that poor come close to the system and the corrupt moves out of it”.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X