டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கஸ்டமர்களின் சாப்பாட்டை நைஸாக சாப்பிட்ட ஸொமாட்டோ ஊழியருக்கு வேலை போச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: கஸ்டமர்களின் சாப்பாட்டை சாப்பிட்ட ஸொமாட்டோ ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

ஆன்லைனில் மூலம் உணவை வீட்டுக்கே கொண்டு வர ஏராளமான நிறுவனங்கள் ஊழியர்களை நியமித்துள்ளன. அவைகளுள் ஸொமாட்டோவும் ஸ்விக்கியும் பிரபல நிறுவனங்களாகும்.

Zomato delivery boy sacked from company

இந்நிலையில் உணவை டெலிவரி செய்ய புறப்பட்ட ஸொமாட்டோ ஊழியர் ஒருவர் நடு ரோட்டின் ஓரம் நின்றுக் கொண்டு ஒவ்வொரு பாக்கெட்டாக உணவை சுவைத்துவிட்டு பின்னர் எடுத்தது தெரியாமல் இருக்க கொத்தனார் பூசுவது போல் உணவு பொட்டலத்தில் ஸ்பூனால் பரவலாக பூசிவிடுகிறார்.

பின்னர் இன்னொரு பார்சலை எடுத்து சுவைக்கிறார்.
அதிலும் வாடிக்கையாளருக்கு வழங்குவதற்காக கொடுக்கப்பட்ட ஸ்பூனை நாக்கால் துழவி துழவி சாப்பிடுகிறார். இதுபோல் ஒவ்வொரு பார்சலாக அவர் எடுத்து சுவைத்தது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிவிடுகிறது.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்வோர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த ஊழியர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் மற்றோர் தரப்பினர் பசி என்பது கட்டுப்படுத்த இயலாதது. எனவே இது போன்ற கடும் தண்டனை அதிகம் என்கிறார்கள்.

English summary
Zomato company sacks staff who opens the food, eats and seals it back.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X