டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2019-20ல் லாபம் காட்டி இருக்கும் சொமோட்டோ...அடுத்த திட்டமும் ரெடி!!

Google Oneindia Tamil News

டெல்லி: உணவு டெலிவரி நிறுவனமான சோமோட்டோ 2019-20 ஆம் நிதியாண்டில் 394 டாலர் அளவிற்கு இரட்டிப்பு மடங்கில் லாபத்தை காட்டியுள்ளது. 293 மில்லியன் டாலர் அளவிற்கு நஷ்டத்தையும் காண்பித்துள்ளது. கொரோனா தாக்கம் இருந்த கடந்த ஜூன் மாதத்தில் 41 மில்லியன் டாலர் வருமானத்தையும், 12 மில்லியன் டாலர் அளவிற்கான நஷ்டத்தையும் காண்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நாட்டில் இருக்கும் ஓட்டல்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டு இருந்த உணவகங்கள் தற்போது சிறிது சிறிதாக திறக்கப்பட்டு வருகிறது. அதுவும் இடைவெளி விட்டு அமர்ந்து சாப்பிட வேண்டும், மாஸ்க் அணிந்து வர வேண்டும், ஏசி போட்டுக் கொள்ளக் கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளால், உணவகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக உணவு டெலிவரி நிறுவனமான சோமோட்டோ இதற்கு விதிவிலக்கில்லை. 2019ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் 192 மில்லியன் டாலர் வருமானத்தையும், 277 மில்லியன் டாலர் அளவிற்கு நஷ்டத்தையும் காண்பித்துள்ளது.

Zomato doubles revenue in 2019-20 to $394 million as loss in FY 2020

இதுமட்டுமின்றி நகரங்களில் பணியாற்றி வந்த பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால், பார்சல் உணவுகளுக்கான தேவையும் குறைந்துள்ளது. தற்போது சிறிது சிறிதாக உணவகங்கள் திறக்கப்பட்டு, அலுவலகங்களும் திறக்கப்பட்டு வருவதால், இனி பார்சல் உணவுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

24 மணி நேரத்தில் புதிதாக 27,114 பேருக்கு கொரோனா.. இந்தியாவில் 10 நாட்களாக எகிறும் கேஸ்கள்24 மணி நேரத்தில் புதிதாக 27,114 பேருக்கு கொரோனா.. இந்தியாவில் 10 நாட்களாக எகிறும் கேஸ்கள்

சொமோட்டோ நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான தீபிந்தர் கோயல் கூறுகையில், ''நடப்பு ஜூலை மாதத்தில் வர்த்தகம் 60% மீட்கப்படும் என்று நம்புகிறோம். ஒவ்வொரு மாதமும் ஒரு மில்லியன் அளவிற்கு முதலீடு செய்கிறோம். தற்போது கொரோனாவுக்கு முன்பு என்ன வர்த்தகம் நடந்ததோ அதில், 60% வருமானத்தை இந்த மாதம் எடுத்து விடுவோம். முழுவதும் மீண்டு வருவதற்கு இன்னும் 3, 6 மாதங்கள் ஆகலாம்'' என்று தெரிவித்துள்ளார்.

இதுதவிர புதிய திட்டங்களிலும் சொமோட்டோ ஈடுபட்டுள்ளது. அதாவது, சமையலறைக்கு தேவைப்படும் தரம் வாய்ந்த ஆரோக்கியமான உணவு தயாரிப்புப் பொருட்களை உணவகங்களுக்கு வழங்குவதற்காக ஹைபர்பியூர் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை இந்தாண்டு இறுதியில் துவங்க திட்டமிட்டுள்ளது.

English summary
Food delivery startup Zomato doubled its revenue but at the same time it shows also in the FY 2019-2020
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X