தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒகேனக்கல் ஆற்றில் மீனவரின் வலையில் சிக்கிய 106 கிலோ ராட்சத மீன்.. வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

தருமபுரி : ஒகேனக்கல் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் வலையில் 106 கிலோ எடையுள்ள கட்லா மீன் சிக்கி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

    ஒகேனக்கல் ஆற்றில் மீனவரின் வலையில் சிக்கிய 106 கிலோ மீன் - வீடியோ

    கர்நாடக மாநிலம் குடகு, சாம்ராஜ் நகர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளிலும், கேரளத்தின் வயநாடு உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி, காவிரி ஆற்றில் சுமார் நொடிக்கு 1.50 லட்சம் கன அடி வரையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    A catfish weighing 106 kg was caught in a fishermans net while fishing in the hogenakkal falls

    இந்நிலையில் மழை பெய்வது கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் குறைந்துள்ளதால், கர்நாடகாவில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவும் குறைந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 29ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு சுமார் 20 ஆயிரம் கனஅடி நீர வந்து கொண்டிருக்கிறது.

    A catfish weighing 106 kg was caught in a fishermans net while fishing in the hogenakkal falls

    இந்நிலையில் மழை அளவு குறைத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீனவர்கள் மீன் பிடித்தொழிலில் நேற்று ஈடுபட்டனர். நேற்று காவிரி ஆற்றில் மீன்பிடித்த ஒரு மீனவரின் வலையில் 106 கிலோ எடைகொண்ட கட்லா மீன் சிக்கியது.

    சென்னையில் 980 பேருக்கு கொரோனா பாதிப்பு- பிற மாவட்டங்களில் தொடர்ந்து விஸ்வரூபம்!சென்னையில் 980 பேருக்கு கொரோனா பாதிப்பு- பிற மாவட்டங்களில் தொடர்ந்து விஸ்வரூபம்!

    அங்கு பொதுவாக மீனவர்கள் வலையில் அதிகப்பட்சமாக 40 கிலோ வரைதான் கிடைக்கும். ஆனால் முதல்முறையாக 106 கிலோ கட்லா மீன் பிடிப்பட்டு இருப்பது மீனவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மீனவரின் வலையில் 106 கிலோ எடையுள்ள மீன் சிக்கும் வீடியோ சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது.

    English summary
    A catfish weighing 106 kg was caught in a fisherman's net while fishing in the hogenakkal falls . The related video is going viral on social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X