தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தருமபுரி தொகுதி திமுக வசமாகிறது... அன்புமணி ராமதாஸ்-க்கு பெரும் பின்னடைவு

Google Oneindia Tamil News

Recommended Video

    தருமபுரி தொகுதி திமுக வசமாகிறது... அன்புமணிக்கு பெரும் பின்னடைவு

    தருமபுரி: தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

    542 தொகுதிகளில் தேர்தல் நடந்த நிலையில் பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவைப்படுகிறது. 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 90 இடங்களுக்கு மேல் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

    Dharmapuri constituency Candidate Anbumani Ramadoss Is leading

    தமிழகத்தில் 45 மையங்களில், 17,000 ஊழியர்கள் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இருந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகளும், ஒரு எம்.பி பதவியும் ஒதுக்கப்பட்டன.

    தருமபுரி வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் களமிறங்கினார். இந்தநிலையில், முதல்சுற்றில் 2311 வாக்குகள் முன்னிலை பெற்றார் அன்புமணி, பின்னர், அடுத்தடுத்த சுற்றுகளில், முன்னிலை பெற்ற திமுக வேட்பாளர் செந்தில்குமார், 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளார்.

    அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமக இடம் பெற்ற நிலையில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்தநிலையில், ஏமாற்றம் அளிக்கும் விதமாக தேர்தல் முடிவு வந்துள்ளது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், அதிமுக பெருவாரியாக வெற்றி பெற்ற போதும், தருமபுரி தொகுதியில் அன்புமணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Lok sabha election results 2019: Dharmapuri constituency Candidate Anbumani Ramadoss Is leading
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X