தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுக்கு பேர் நவீன கழிவறையா..? முதலில் சரி செய்ங்க... அப்புறம் திறக்கிறேன்.. செந்தில்குமார் MP சுளீர்

Google Oneindia Tamil News

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள படி கழிவறை கட்டாத ஒப்பந்ததாரரை திமுக எம்.பி.செந்தில்குமார் கேள்விக்கணைகளால் அலற விட்டுள்ளார்.

Recommended Video

    அவசர, அவசரமாக கட்டப்பட்ட கழிப்பறை…ஒப்பந்ததாரருக்கு வார்னிங் தந்த திமுக எம்பி!

    தருமபுரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் செந்தில்குமார், அதிரடிகளுக்கு பெயர் பெற்றவர்.

    இவர் ஆய்வுக்கு வருகிறார் என்று தெரிந்தாலே அரசு அதிகாரிகள் முதல் ஒப்பந்ததாரர்கள் வரை பதற்றம் பற்றிக்கொள்ளும்.

    கிளப்ஹவுஸில் இப்படியும் ஒரு நிகழ்வு! 6 மணி நேரம் தொடர்ந்து நடந்த திருக்குறள் முற்றோதல்! கிளப்ஹவுஸில் இப்படியும் ஒரு நிகழ்வு! 6 மணி நேரம் தொடர்ந்து நடந்த திருக்குறள் முற்றோதல்!

     செந்தில்குமார் எம்.பி.

    செந்தில்குமார் எம்.பி.

    அரசு கட்டிடங்களும், சாலைகளும் வலிமையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள செந்தில்குமார் எம்.பி. இந்த கட்டுமானப் பணிகளில் குறை இருந்தால் மட்டும் சமரசமே செய்து கொள்ளமாட்டார். எவ்வளவு பெரிய ஒப்பந்ததாரராக இருந்தாலும் செந்தில்குமார் எம்.பி. துணிச்சலாக குறைகளை சுட்டிக்காட்டுவார். இந்நிலையில் அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நவீன கழிவறையை திறந்து வைப்பதற்காக செந்தில்குமார் எம்.பி. சென்றிருந்தார்.

    திட்ட மதிப்பீடு

    திட்ட மதிப்பீடு

    ரூ.11.50 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கழிவறை கட்டப்பட்ட நிலையில், உள்ளே மின் இணைப்பு கூட கொடுக்கப்படாமல் இருந்தது. மேலும், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வண்ணங்களை தீட்டாமல் தனது மனம் விரும்பிய வண்ணத்தை சுவர்களில் தீட்டி வைத்திருந்தார் ஒப்பந்ததாரர். இதுமட்டுமல்லாமல் டைல்ஸ் உள்ளிட்ட இன்னும் சில பொருட்கள் தரமற்று இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மொத்தத்தில் தான் எதிர்பார்த்தபடி நவீன கழிவறை இல்லாததால் ஒப்பந்ததாரரை வரவழைத்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார்.

    திருத்தம்

    திருத்தம்

    திமுக எம்.பி. செந்தில்குமாரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஒப்பந்ததாரர் தடுமாறினார். தான் கூறிய திருத்தங்களை முழுமையாக செய்த பிறகே நவீன கழிவறையை திறந்து வைப்பேன் என்றும் இன்று திறக்க முடியாது எனவும் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ஒப்பந்ததாரர் மீண்டும் கட்டுமானப் பணியில் கை வைத்தால் செலவு கூடும் என்பது குறித்து எடுத்துரைத்தார்.

    ஒப்பந்தப்படி

    ஒப்பந்தப்படி

    இதற்கு தாம் பொறுப்பேற்க முடியாது என்றும் மற்ற இடங்களிலெல்லாம் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஒப்பந்ததாரர்கள் அரசு பணிகளை மேற்கொள்ளும் போது நீங்கள் மட்டும் ஏன் உங்கள் இஷ்டத்துக்கு செய்தீர்கள் என மீண்டும் வினவினார். ஒப்பந்ததாரருடன் நின்ற அதிகாரிகளுக்கும் சற்று நேரம் வியர்த்து விறுவிறுத்துப் போனது. செந்தில்குமார், சின்ராஜ், போன்ற ஒரு சில எம்.பி.க்கள் மட்டுமே, சமரசமின்றி மக்களுக்காக அதிகாரிகளை கேள்வி கேட்கின்றனர். பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் நமக்கேன் வம்பு என்பது போல் தங்கள் பதவிக்காலத்தை நிறைவு செய்துவிடுகின்றனர்.

    English summary
    Dharmapuri Mp senthil kumar, who inspected the modern toilet
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X