தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 கையையும் விட்டுட்டு.. ஹேண்டில் பாரை பிடிக்காமல்.. தப்பு தம்பி மேலதான்.. போலீஸ்காரர் மேல இல்லை!

சிறுவனுக்கு தாம் அறிவுரை சொன்னதாக தெரிவிக்கிறார் போலீஸ்காரர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Dharmapuri Policeman Subramani explains about seized the Cycle

    தர்மபுரி: ஹேண்டில் பாரை பிடிக்காமலேயே.. ரெண்டு கைகளையும் விட்டுட்விட்டு.. சைக்கிளில் வந்ததால்தான் மாணவனை பிடித்து நிறுத்தியதாக போலீஸ்காரர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

    2 நாளாக ஒரு வீடியோ வைரலானது... அந்த வீடியோ குறித்த உண்மை தன்மை தற்போது வெளிவந்துள்ளது. தர்மபுரி மாவட்டம், ஏரியூர் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்ப்பவர் சுப்ரமணி. வழக்கம்போல வாகன சோதனையில் மற்ற போலீசாருடன் ஈடுபட்டு கொண்டிருந்தார் சுப்பிரமணி.

    அந்த நேரம் பார்த்து ஒரு பள்ளி மாணவன் ஒரு கையில் செல்போனில் பேசி கொண்டே மற்றொரு கையில் சைக்கிளை ஓட்டி கொண்டு வந்தான். அவனை தடாலடியாக பாய்ந்து பிடித்தார் சுப்பிரமணி. அது ஒரு இலவச சைக்கிள்... அதனை அலேக்காக தூக்கி ஒரு ஓரமாக வைத்து, பூட்டும் போட்டுவிட்டார்.

    இரு ஆண்டுகளுக்கு பிறகு.. அதிக ஈரப்பதமான நாள் இன்று.. ஏன் எப்படி?இரு ஆண்டுகளுக்கு பிறகு.. அதிக ஈரப்பதமான நாள் இன்று.. ஏன் எப்படி?

    செல்போன்

    செல்போன்

    சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணி சிறுவனை வழிமறித்து சைக்கிளை பூட்டி பறிமுதல் செய்த நேரம், ஹெல்மட் போடாமலும், செல்போனில் பேசிக் கொண்டே பைக் ஓட்டிக் கொண்டும் சிலர் அந்த பக்கமாக சென்று கொண்டிருந்தனர்.

    சைக்கிள்

    சைக்கிள்

    இதையடுத்து, ஹெல்மட் போடாமல் சைக்கிளில் போனதால்தான் சுப்பிரமணி பறிமுதல் செய்தார் என்றும், சிறுவனின் குடும்பத்தார் வந்த பிறகே ஒரு மணி நேரம் கழித்து சைக்கிளை ஒப்படைத்ததாகவும் செய்திகள் வந்தன.இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், உண்மையிலேயே சுப்பிரமணி சிறுவனை ஏன் நிறுத்தினார், எதற்காக சைக்கிளை பறிமுதல் செய்தார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

    பறிமுதல்

    பறிமுதல்

    இதில், சிறுவன் தனது சைக்கிளிலிருந்து கைகளை விட்டு ஓட்டி வந்துள்ளான். அதுவும் வேகமாக இப்படி ரோட்டில் வரவும்தான், பதறிய சுப்பிரமணி, சிறுவனை தடுத்து நிறுத்தி உள்ளார். சிறுவனின் பாதுகாப்பு கருதியும், அந்த மாணவனுக்கு எச்சரிக்கை தரவும்தான், சைக்கிளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

    காவல்துறை

    காவல்துறை

    சிறுவனின் வீட்டிலிருந்து பெற்றோரை வரவழைத்து, அவரிகளிடம் நடந்த விவரத்தை கூறி, பிறகு சிறுவனை எச்சரித்த பிறகே சைக்கிளை தந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனால், சைக்கிளில் ஹெல்மெட் போடாமல் சென்றதால், சைக்கிளை கைப்பற்றியது என்ற செய்தி முற்றிலும் தவறாது என்று காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Dharmapuri Policeman Subramani explains about seized the Cycle from the boy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X