தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை.. தருமபுரியில் கர்ப்பிணி பலி.. மறியல் செய்த உறவினர்கள்

Google Oneindia Tamil News

தருமபுரி: தருமபுரி மருத்துவமனையில் தவறான சிகிச்சை நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்ததை அடுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சோகத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன். இவரது மனைவி அபிராமி (25). 9 மாத கர்ப்பிணியான அபிராமியை தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வழக்கமான சோதனைக்காக அவரது பெற்றோர் நேற்று இரவு அழைத்து வந்துள்ளனர்.

அபிராமி

அபிராமி

அப்போது சிகிச்சையில் இருந்த அபிராமிக்கு திடீரென உடல்நிலை மோசமானது. இதனால் தனியார் மருத்துவமனை நிர்வாகம் அவசர அவசரமாக ஆட்டோ ஒன்றில் ஏற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அபிராமியை அனுப்பி வைத்துள்ளது.

சோகத்தில்

சோகத்தில்

அங்கிருந்த அரசு மருத்துவர்கள் அபிராமியை சோதித்து பார்த்ததில் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்

. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் இரவு முழுவதும் மருத்துவமனையில் சோகத்தில் மூழ்கி இருந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்து பாதிப்பு

இந்த நிலையில் தவறான சிகிச்சை அளித்ததால்தான் கர்ப்பிணி இறந்ததாக கூறி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திடீரென உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சேலம்- தருமபுரி நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கலைந்த உறவினர்கள்

கலைந்த உறவினர்கள்

விரைந்து வந்த போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். சாலை மறியலை கைவிட்டு உறவினர்கள் கலைந்துச் சென்றனர்.

English summary
Dharmapuri pregnant lady died after getting treatment from Private hospital. Relatives of Pregnant lady are involved in Sit in agitation near Salem - Dharmapuri NH.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X