தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோடை விடுமுறைக்கு ஊருக்கு போகாதீங்க… ஓட்டு போடுங்க ப்ளீஸ்… கட்சியினர் கெஞ்சல்

Google Oneindia Tamil News

தர்மபுரி: பள்ளிக் கல்வித் துறை தேர்வுகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், கோடை விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்பவர்களை தடுத்து நிறுத்தி, தேர்தல் நாளான 18 ம் தேதி வரை, செல்ல வேண்டாம் என, அரசியல் கட்சியினர் கெஞ்சி வருகின்றனர்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இதில், பெரும்பகுதியினர் தங்களது குடும்பத்தினருடன், இங்கு தங்கி உள்ளனர்.

Do not go to summer vacation, please vote Asking party candidates

இந்த நிலையில், பள்ளித் தேர்வுகள் இன்றுடன் முடிவு எடுப்பது அடுத்து, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணியாற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இருப்பினும் அவர்களின் ஓட்டு உரிமை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ளன.

இதனால், கிடைக்கும் வாக்குகள் சிதறக்கூடும் என்பதால்,அதிமுக - திமுக உள்ளிட்ட கட்சிகள், கோடை விடுமுறைக்கு வெளியூர் செல்பவர்களை, போக வேண்டாம் என கேட்டு வருகிறார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரு நாடாளுமன்றத் தொகுதிகள் மட்டுமின்றி மொத்தம், மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தலும் நடக்க உள்ளன.

சிலை கடத்தல்.. பொன். மாணிக்கவேல் விசாரணைக்கு தடையில்லை.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு சிலை கடத்தல்.. பொன். மாணிக்கவேல் விசாரணைக்கு தடையில்லை.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மேலும், தேர்தல் நாளான 18ஆம் தேதி வரை இருந்து வாக்களித்து விட்டு சென்றால், தனி கவனிப்பாக ஊருக்கு சென்று வரும் செலவினை, தாங்களே தருவதாகவும் உறுதியளித்துள்ளனர் என கூறப்படுகிறது. இதனால் வெளியூர் செல்பவர்கள், செல்லலாமா, வேண்டாமா என்ற இரு மனநிலையில் உள்ளனர்.

English summary
Loksabha Elections 2019: Do not go to summer vacation, please vote : Party candidates Request
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X