தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விரும்பி அழைத்து வந்து கட்சியில் சேர்த்த முல்லைவேந்தனை சஸ்பெண்ட் செய்தது திமுக!

முல்லைவேந்தன் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    DMK Mullaivendan: முல்லைவேந்தனை சஸ்பெண்ட் செய்தது திமுக- வீடியோ

    தருமபுரி: தருமபுரியை சேர்ந்த மூத்த திமுக நிர்வாகி முல்லைவேந்தன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார்.

    ஆரம்ப காலத்தில் திமுகவின் சிறந்த பேச்சாளராக வலம்வந்தவர் முல்லைவேந்தன். பின்னர் தி.மு.கவில் இணைந்து தருமபுரி மாவட்ட செயலாளராக உயர்ந்தார். 1989, 1996, 2016 ஆம் ஆண்டுகளில் மொரப்பூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996-ம் ஆண்டு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

    EX Minister Mullaivendan suspended from DMK

    யார் பக்கம் குண்டர்கள்? யார் பக்கம் தொண்டர்கள்.. ராஜேந்திர பாலாஜி பலே பேட்டி! யார் பக்கம் குண்டர்கள்? யார் பக்கம் தொண்டர்கள்.. ராஜேந்திர பாலாஜி பலே பேட்டி!

    தருமபுரி மாவட்டத்தின் முதல் அமைச்சரே முல்லைவேந்தன்தான். அதற்குமுன்பு அந்த மாவட்டத்தில் வேறு எந்த கட்சியிலும் அமைச்சர்கள் உருவானதில்லை. ஆனால் திமுக தலைமை மீதுள்ள விரக்தியால் தேமுதிகவுக்குப் போன முல்லை வேந்தன் மீண்டும் திமுகவுக்கே திரும்பினார்.

    ஸ்டாலினை நேரில் சந்தித்து மீண்டும் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். ஆனால் கட்சியில் அவருக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என கூறப்படுகிறது. அதனால் கட்சி தாவலிலும் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் சில தினங்களாக கசிய ஆரம்பித்தன. இந்நிலையில், முல்லைவேந்தன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    லோக்சபா தேர்தல்... எந்த வேட்பாளருக்கு எவ்வளவு சொத்து.. இதை கிளிக் பண்ணுங்க தெரியும்!

    "கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முல்லைவேந்தன் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் முல்லைவேந்தன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    DMK has announced, Ex Minister Dharmpuri Mullaivendan suspended from the party
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X