India
 • search
தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தருமபுரியே அசந்து போச்சு.. புதுமாப்பிள்ளை ராஜா செய்த காரியத்தை பாருங்க.. பூரித்து போன அந்த விஐபி

Google Oneindia Tamil News

தருமபுரி: புதுமாப்பிள்ளை ராஜா செய்த காரியத்தை பார்த்து, தருமபுரி மாவட்டமே பூரித்து போயுள்ளது.. வீரப்பனின் மகளே நேரில் சென்று பாராட்டி இருக்கிறார் என்றார் பார்த்து கொள்ளுங்களேன்..!
சமீபகாலமாகவே இளைஞர்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள்.. மனிதநேயத்தை பல விதங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.. குறிப்பாக தங்கள் திருமணங்களில் இத்தகைய நற்காரியங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

  தருமபுரியே அசந்து போச்சு.. புதுமாப்பிள்ளை ராஜா செய்த காரியத்தை பாருங்க.. பூரித்து போன அந்த விஐபி

  கடந்த மாதம் மயிலாடுதுறையில் ஒரு திருமணம் நடந்தது.. அவர் பெயர் புருஷோத்தமன்.. வயது 30 ஆகிறது.. இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

  மயிலாடுதுறையே அசந்து போச்சு.. ஒரே பெண்ணை 3 முறை கல்யாணம் செய்து.. அசரடித்த மாப்பிள்ளைமயிலாடுதுறையே அசந்து போச்சு.. ஒரே பெண்ணை 3 முறை கல்யாணம் செய்து.. அசரடித்த மாப்பிள்ளை

  புவனேஸ்வரி

  புவனேஸ்வரி

  இவருக்கு புவனேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயமானது.. புருஷோத்தமனை பொறுத்தவரை இந்துவாக இருந்தாலும், சின்ன வயசிலிருந்தே இஸ்லாமியர், கிறிஸ்துவர் என அனைத்து சமூக மக்களுடன் இணைந்து பழகி வந்துள்ளார்.. எல்லா மதமும் சம்மதம் என்ற ரீதியிலேயே இவருடைய கொள்கையும், வாழ்க்கையும் இருந்துள்ளது.. அனைத்து தரப்பு சமுதாயத்திடமும் இவருக்கு நண்பர்களும் உண்டு.. அவர்களின் மதங்கள் புருஷோத்தமனை பெரிதளவு ஈர்த்தும் வந்துள்ளது..

   புருஷோத்தமன்

  புருஷோத்தமன்

  அதனால், தன்னுடையதிருமணத்தை 3 மத முறைப்படி நடத்த வேண்டும் ஆசைப்பட்டார்.. அதன்படியே இருவீட்டின் சம்மதப்படி, முதல் நாள் கிறிஸ்துவ முறைப்படி மற்றும் இஸ்லாமிய முறைப்படி, 2-ம்நாள் இந்து முறைப்படியும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்த 3 திருமணத்திற்காகவே 3 விதமான திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டன.. உறவினர்கள், நண்பர்களுக்கும் 3 பத்திரிகைகளையுமே தந்தார் புருஷோத்தமன்.. ஒரே பெண்ணுக்கு மும்மதமுறைப்படி திருமணம் செய்தார் புருஷோத்தமன்.. 3 விதமான மதத்தினரும் புருஷோத்தமனை வாழ்த்திவிட்டு சென்றனர்.

   ராஜா மாப்பிள்ளை

  ராஜா மாப்பிள்ளை

  அதேபோல தருமபுரி மாவட்டத்திலும் இப்போது ஒரு திருமணம் நடந்துள்ளது.. இந்த மாப்பிள்ளையும் வித்தியாசமான முறையில் தன் திருமணத்தை செய்துள்ளார்.. பாப்பாரப்பட்டியை சேர்ந்த இந்த மாப்பிள்ளை பெயர் ராஜா.. அனுசுயா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.. இந்த திருமணத்தில் உறவினர்களைவிட, ஆதரவற்ற குழந்தைகளும்,முதியவர்களும், பெரியவர்களும். காதுகேளாத குழந்தைகளும்,மாற்று திறனாளிகளும்தான் அதிகளவில் இருந்தனராம்.. அதேபோல் நலிவடைந்த தெருக்கூத்து கலைஞர்களும் அதிகமாக இருந்தனர்...

   ஆதரவற்றவர்கள்

  ஆதரவற்றவர்கள்

  இவர்கள் அத்தனை பேரையும், வேன்களை ஏற்பாடு செய்து, மண்டபத்திற்கு அழைத்து வந்துள்ளார்.. அங்கு அவர்களுக்கு உணவளித்து, அவர்களுக்கு புதிய ஆடைகள் கொடுத்து மகிழ்ந்தார்... அதே போல் ஆதரவற்றவர்களுடன் சேர்ந்து புதுமணத்தம்பதிகள் போட்டோவும் எடுத்துக்கொண்டனர்... ஆதரவற்றவர்களை அழைத்து திருமணத்தில் கலந்துகொள்ள செய்தது அந்த பகுதியில் பரபரப்பாக ஆச்சரியமாகவும் பேசப்பட்டது..

   ஆச்சரிய திருமணம்

  ஆச்சரிய திருமணம்

  திருமணத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் பாராட்டி சென்றனர். இந்த நிகழ்வில் சந்தனகடத்தல் வீரப்பன் மகள் விஜயலட்சுமியும் கலந்து கொண்டு, ராஜாவின் செயலால் ஆச்சரியப்பட்டுள்ளார்.. இந்த திருமணம் குறித்து மாப்பிள்ளை ராஜா சொல்லும்போது, ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஆதவரற்ற முதியவர்கள் ஆசிரமங்களிலியே உணவளித்து வெளி உலகமே தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர்... அவர்களும் இது போன்ற திருமண விழாக்களுக்கு அழைத்து உணவளிப்பதால் அவர்கள் சுதந்திரமாக இருப்பார்கள் என்கிறார்..

   மனமாற்றம்

  மனமாற்றம்

  உண்மைதான் இதன்மூலம் இந்த வயதானவர்களுக்கு ஒரு மாறுதலும், மனமாற்றமும் நிச்சயம் ஏற்பட செய்யும்.. அதுமட்டுமல்ல, திருமணம் என்றலே சொந்தக்காரர்கள்தான் ஆக்கிரமித்து நிறைந்து இருப்பார்கள்.. இது நமக்கு பல வகைகளில் சந்தோஷம் தரக்கூடியதுதான் என்றாலும், சில சமயம், எவ்வளவுதான் பார்த்து பார்த்து கவனித்தாலும் ஏதாவது ஒரு குறையை சொல்லிவிட்டு சொந்தங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. இத்தகையவர்களை காட்டிலும், ராஜா நடத்திக் காட்டிய இந்த திருமணம், ஆயிரம் மடங்கு உன்னதமானது என்றே சொல்லலாம்.

  English summary
  Good news in dharmapuri and man who conducted the wedding ceremony in a different way
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X