தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேகமாக சுழன்று வந்த சூறைகாற்று.. ஆம்பன் புயலால் தர்மபுரியில் செம காற்று.. வெதர்மேன் வெளியிட்ட வீடியோ

ஆம்பன் புயல் காரணமாக தர்மபுரியில் அடித்த சூறை காற்று குறித்த வீடியோவை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் பகிர்ந்துள்ளார்.

Google Oneindia Tamil News

தர்மபுரி: ஆம்பன் புயல் காரணமாக தர்மபுரியில் அடித்த சூறை காற்று குறித்த வீடியோவை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

    Cyclone amphan: ஆம்பன் புயல் எங்கு கரையை கடக்கும்? தமிழகத்தின் நிலை என்ன?

    வங்க கடலில் நேற்று இரவு ஆம்பன் புயல் உருவானது. ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து 960 கி.மீ. தொலைவில் இந்த புயல் இருக்கிறது.

    இந்த புயல் மே 20-ந் தேதி கரையை கடக்கும். வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே இந்த புயல் கரையை கடக்கிறது. இந்த புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது.

    லாக்டவுன் 4.0.. அலுவலகங்கள், நிறுவனங்கள் இயங்கலாம்.. ஆனால் முக்கிய கட்டுப்பாடுகள்.. முழு விபரம்!லாக்டவுன் 4.0.. அலுவலகங்கள், நிறுவனங்கள் இயங்கலாம்.. ஆனால் முக்கிய கட்டுப்பாடுகள்.. முழு விபரம்!

    ஆம்பன் புயல் தமிழகம்

    ஆம்பன் புயல் தமிழகம்

    ஆம்பன் புயல் காரணமாக தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. முக்கியமாக கொங்கு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஈரோடு, கரூர், சேலம், கோவை, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று இரவும் அங்கு மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

    தருமபுரி நிலை

    தருமபுரி நிலை

    இந்த நிலையில் தர்மபுரியில் இன்று மாலையில் இருந்து தீவிரமாக மழை பெய்து வருகிறது. எதிர்பார்த்ததை விட தர்மபுரியில் மிக தீவிரமாக மழை பெய்து வருகிறது. அதேபோல் அங்கு சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே சில மரங்கள் இடிந்து விழுந்துள்ளது. அங்கு இரவு முழுக்க மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஆனால் அங்கு இதனால் பெரிய அளவில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.

    என்ன வீடியோ

    இந்த நிலையில் தர்மபுரியில் சூறைக்காற்றுடன் மழை பெய்துது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் டிவிட் செய்துள்ளார். தர்மபுரியில் சின்ன பெரமனூர் பகுதியில் அடித்த சூறை காற்று குறித்த வீடியோ ஆகும் இது.இதில் காற்று மிக வேகமாக சுழன்று அடித்து செல்கிறது. காற்றோடு சேர்த்து மிக தீவிரமாக மழையும் பெய்து வருகிறது .

    கடலோர பகுதி

    கடலோர பகுதி

    தமிழகத்தில் இதேபோல் கடலோர பகுதிகளில் காற்று வீச வாய்ப்புள்ளது என்கிறார்கள். அங்கு லேசான புயல் காற்று வீச வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் கடல் அலை சீற்றத்துடன் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் முன்னிட்டு நாகை, பாம்பன் துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    English summary
    Heavy rain and wind in Dharmapuri district due to Amphan Storm - Video.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X