தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாந்தோப்பில் மனைவியை எரித்த கணவன்.. காட்டி கொடுத்த கேமிரா.. 2 பேரை அள்ளிய போலீஸ்!

மனைவியை கொன்று எரித்த கணவன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Google Oneindia Tamil News

தருமபுரி: மாந்தோப்பில் மனைவியை தீவைத்து எரிக்கும் சிசிடிவி காட்சிகளை கண்டு காரிமங்கலம் போலீசார் அதிர்ந்து போய்விட்டனர்.. இது தொடர்பாக கணவன் உட்பட 3 பேர் கைதாகி உள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே, குள்ளன்கொட்டாயில், கடந்த, 28-ம்தேதி எரிந்த நிலையில், ஒரு பெண்ணின் சடலம் மாந்தோப்பில் கிடந்தது.

இறந்த பெண்ணுக்கு 40 வயதிருக்கும் என்று கூறப்படுகிறது. சடலத்தை கைப்பற்றிய காரிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கவுரம்மா

கவுரம்மா

அதன்படி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில், இருட்டு நேரத்தில் தீ வைத்து எரிக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த பகுதியில் கார் ஒன்றின் அடையாளமும் தெரிந்தது. அதைவைத்து, இறந்த பெண், பெங்களூரு அருகே, நிலமங்களாவை சேர்ந்த கவுரம்மா என்பதும், இவரது கணவர் பெயர் லோகேஷ் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து லோகேஷிடம் விசாரணையை ஆரம்பித்தனர்.

ஜீவனாம்சம்

ஜீவனாம்சம்

அப்போதுதான் பல திடுக் தகவல்கள் வெளியாகின. லோகேஷ்-கவுரம்மா தம்பதிக்கு குழந்தை இல்லையாம். இதை காரணம் காட்டியே 20 வருஷத்துக்கு முன்னாடியே விவாகரத்து செய்துவிட்டார். அதன்படி கவுரம்மாவுக்கு ஜீவனாம்சம் தரும்படி கோர்ட் சொல்லி உள்ளது.

முழு தொகை

முழு தொகை

ஆனால் கொஞ்ச காலம் ஜீவனாம்சம் தந்த நிலையில், அதை தருவதை நிறுத்திவிட்டார் லோகேஷ். இதனால் வாழ வழி இல்லாத கவுரம்மா ஜீவனாம்சம் கேட்டு திரும்பவும் கோர்ட் வாசலை நாடவும், தன் நிலத்தை விற்று முழு தொகையும் தந்துவிடுவதாக லோகேஷ் உறுதி தந்தார்.

சாக்குமூட்டை

சாக்குமூட்டை

சம்பவத்தன்று பணம் தருவதாக சொல்லி கவுரம்மாவை நிலமங்கலம் பாலம் அருகே வரவழைத்துள்ளார். அங்கே கழுத்தை நெரித்து கொலை செய்து, பின் சாக்கு மூட்டையில் கட்டி காரில் போட்டு, காரிமங்கலம் கொண்டு வந்து எரித்துள்ளார். அதன்பிறகு பெங்களூருக்கு தப்பி சென்று விட்டார். இதற்கு லாரி கிளினீர், அனுமந்தராஜ் இதற்கு கூட்டு. இவர்கள் 2 பேரையும் காரிமங்கலம் போலீஸார் கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தனர்.

English summary
karimangalam Police arrested 2 people including husband for wife murder issue near Dharmapuri
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X