தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாமக மீது தவறு இருந்தால் திருத்திக்கொள்வோம்... அன்புமணி ராமதாஸ் சொல்கிறார்

Google Oneindia Tamil News

Recommended Video

    பாமக-வை ஓரங்கட்டும் அதிமுக | பாமக மீது தவறு இருந்தால் திருத்திக்கொள்வோம்... அன்புமணி ராமதாஸ்

    தருமபுரி: பாட்டாளி மக்கள் கட்சி மீது தவறு இருந்தால் திருத்துக்கொள்வோம் என்று அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற பாமகவுக்கு 7 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டன. அதில், பாமகவின் கோட்டை என்று கருதப்பட்ட தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார்.

    If mistake On PMK will correct it In Future Says Anbumani

    அவரை எதிர்த்து திமுக சார்பில் செந்தில் குமார், அமமுக வேட்பாளரான பழனியப்பன் உள்ளிட்டோர் களத்தில் இருந்தனர். இதில், சுமார் 70 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அன்புமணி தோல்வியை தழுவினார்.

    இந்தநிலையில், தருமபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: தருமபுரியில் போட்டியிட்டு தோல்வியுற்ற போதும், இந்தத் தொகுதியின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து போராடுவோம் என்றார்.

     25 வருஷத்துக்கு மோடியை அசைச்சுக்க முடியாது.. அசைச்சுக்க முடியாது.. சொல்வது சிவசேனா! 25 வருஷத்துக்கு மோடியை அசைச்சுக்க முடியாது.. அசைச்சுக்க முடியாது.. சொல்வது சிவசேனா!

    பிரதமர் மோடி தலைமையில் இந்தியா மேம்படும் என்று கூறிய அன்புமணி, தர்மபுரி தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் கூறினார். மக்களின் நம்பிக்கையை பெற தொடர்ந்து பாடுபடுவோம், தோல்வியுற்ற போதும் மக்கள் நல பணி தொடரும் எனவும் பேசினார்.

    மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் அமோக வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் என்றும், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா மேலும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

    English summary
    Anbumani Ramadoss Said that If mistake On PMK will correct it In Future
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X