தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போட்டு தாக்குகிறது கனமழை... தமிழக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Cauvery Opened | துள்ளிகுதித்து மேட்டூர் அணையை வந்தடைந்தது காவிரி நீர்- வீடியோ

    தர்மபுரி: தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 8,000 லிருந்து 9,500 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் 8 வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, அந்த அணைகளில் இருந்து காவிரியில் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    Karnataka Heavy rain echo, Mettur Dam water level increase

    இந்த தண்ணீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வருகிறது. ஒகேனக்கல்லில் காவிரியில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து விநாடிக்கு 8 ஆயிரத்து 900 கனஅடியாக இருந்த நிலையில், 9,500 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் பரிசல்களை விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

    இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று, விநாடிக்கு 8 ஆயிரத்து 400 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 ஆயிரத்து 900 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    நீர் திறப்பை காட்டிலும் நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 45.33 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 46.49 அடியாக அதிகரித்தது. நீர் இருப்பு 15.67 டிஎம்சியாக உள்ளது.

    அதே போல், பவானிசாகர் அணை நீர்மட்டம் 61.88 அடியாகவும், நீர்இருப்பு - 7.8 டிஎம்சியாகவும் உள்ளது. நீர்வரத்து - 870 கனஅடி, வெளியேற்றம் - 205 கனஅடி என்ற அளவிலும் உள்ளது.

    English summary
    Karnataka Heavy rain echo, Water level of Tamil Nadu dam rises
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X