தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நாடகக்காரி".. முத்தமாளின் அநாகரீக பேச்சு.. திகைத்து நின்ற மு.க.ஸ்டாலின்!

அரூரில் நடைபெற்ற மு.க.ஸ்டாலினின் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Google Oneindia Tamil News

Recommended Video

    முத்தமாளின் பேச்சை கேட்டு திகைத்து போன ஸ்டாலின்-வீடியோ

    அரூர்: "வர்ற தேர்தலில் மோடியுடன் சேர்த்து தமிழிசையையும் விரட்டி அடிக்க வேண்டும்" என்று முத்தம்மாள் என்ற திமுக பெண் தொண்டரின் ஆவேச பேச்சினை கண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைவருமே கைதட்டி வரவேற்றனர்.

    அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளுக்கு உட்பட்ட செட்ரப்பட்டி, மூக்கனூர் பகுதிகளில் ஊராட்சி சபை கூட்டங்களில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    அப்போது அவர் பேசும்போது, "மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள இரண்டு ஆட்சிகளையும் அப்புறப்படுத்த வேண்டும்.

    கேள்வி கேட்கிறார்

    கேள்வி கேட்கிறார்

    சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தியை பிரதமராக நான் முன்மொழிந்தேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டபோது, அந்த கூட்டத்தில் ராகுல் காந்தியை ஏன் முன்மொழியவில்லை என பாஜக மாநில தலைவர் தமிழிசை கேட்கிறார். பேசினால் ஏன் பேசினேன் என்று கேட்கிறார்கள். பேசவில்லை என்றால் ஏன் பேசவில்லை என்று கேட்கிறார்கள்.

    வறுமை ஒழிப்பு

    வறுமை ஒழிப்பு

    தமிழ்நாட்டு மக்கள் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதனால்தான் நாம் கூட்டிய சென்னை கூட்டத்தில் ராகுல் காந்தியை முன்மொழிந்தேன். ராகுல் காந்தி ஏழைகளுக்கு குறைந்த பட்சவருமானத்தை வழங்கக்கூடிய ஒரு கனவு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். வறுமையை ஒழிக்க இந்தத் திட்டம் ஒரு மைல்கல்லாக அமையும்" என்று பேசினார்.

    முத்தம்மாள்

    முத்தம்மாள்

    இதையடுத்து, அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் மு.க.ஸ்டாலினிடம் சில கோரிக்கைகளை விடுத்தனர். அப்போது ஒரு பெண், ஸ்டாலின் தருமபுரிக்கு வந்ததால்தான் மழை பெய்தது என்றார். பிறகு வேறு ஒரு கோரிக்கையினை தந்த முத்தம்மாள் என்பவரிடம் மு.க.ஸ்டாலின், மோடியை விரட்ட வேண்டும் என்றார்.

    ஸ்டாலினா, எடப்பாடியா?

    ஸ்டாலினா, எடப்பாடியா?

    அதற்கு முத்தம்மாள், "ஸ்டாலினா, எடப்பாடியா என்றுதான் போட்டி இருக்க வேண்டும், இதில் மோடி வரவே கூடாது. நீங்கள்தான் ஜெயிக்க வேண்டும். மோடியை விரட்ட வேண்டும், கூடவே தமிழிசையையும் விரட்ட வேண்டும்" என்றார். முத்தம்மாள் இப்படி சொன்னதும் கூட்டத்தில் பலமான கைதட்டல் எழுந்தது.

    கண்டிக்கவில்லை

    கண்டிக்கவில்லை

    இந்த முத்தம்மாள் இப்படிக் கூறியபோது தமிழிசையை நாடகக்காரி என்று வர்ணித்துப் பேசினார். இது தவறான வார்த்தை, இப்படி சொல்லக் கூடாது என்று மு.க.ஸ்டாலினும் கண்டிக்கவில்லை, கூடியிருந்த திமுகவினரும் கண்டிக்கவில்லை. பெண்ணே ஒரு பெண்ணை இழிவுபடுத்தலாமா என்றும் யாரும் கேட்கவில்லை!.

    English summary
    DMK Leader MK Stalin participated in Harur Gram Sabha Meeting. He asked the meeting to get rid of PM Modi in the coming elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X