தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெளியூர்க்காரர் வெற்றி பெற்றுவிட கூடாது தருமபுரி வாக்காளர்களே.. ஸ்டாலின் தடாலடி பிரச்சாரம்

Google Oneindia Tamil News

தருமபுரி: அன்புமணி ராமதாஸ் வெளியூர்க்காரர் என்பதால் வெற்றிபெறச் செய்யாதீர்கள் என தருமபுரி லோக்சபா தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் மறைமுகமாக தெரிவித்தார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் தர்மபுரி லோக்சபா திமுக வேட்பாளர் செந்தில்குமார் ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் இன்று இரவு, மொரப்பூர் பகுதியில் வேன் மூலம், பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

MK Stalin slams Anbumani Ramadoss in Dharmapuri Lok Sabha constituency

அப்போது அவர் கூறியதாவது: தமிழின தலைவரான கருணாநிதிக்கு 6 அடி, நிலம் கூட தர மறுத்தது எடப்பாடி பழனிச்சாமி அரசு. இந்த குற்றச்சாட்டை நான் தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைத்ததும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு பதிலாக சில கருத்துக்களை கூறியுள்ளார்.

சூரியன் இருக்கா.. பொங்கல் வைக்க பானை இருக்கா.. அரிசி போட கையும் இருக்கு.. திருமாவளவன் அசத்தல் பேச்சு சூரியன் இருக்கா.. பொங்கல் வைக்க பானை இருக்கா.. அரிசி போட கையும் இருக்கு.. திருமாவளவன் அசத்தல் பேச்சு

மெரினாவில் நினைவிடம் அமைக்க கூடாது என்று வழக்கு இருந்ததாகவும், எனவே கருணாநிதிக்கு அடக்கம் செய்ய நிலம் கொடுக்கவில்லை என்றும், முதல்வர், கூறி உள்ளார். ஆனால் வழக்கு இருந்தது ஜெயலலிதா சமாதி அமைக்க கூடாது என்பதுதான். அந்த வழக்கில் கூட பாமக வழக்கறிஞர் பாலு மற்றும் சிலர் தான் தொடர்ந்திருந்தனர் அவர்களும் கருணாநிதிக்கு ஏறினால் இடம் கிடைக்க கிடைக்க வேண்டும் என்பதற்காக வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சியை மலர வைப்பேன் என்று கருணாநிதிக்கு உறுதி அளித்து இருந்தேன். அவரது காலடியில் வெற்றியை சமர்ப்பிக்க உறுதிபூண்டுள்ளோம். அரூரில் தொழில்பேட்டை துவங்கப்படும், உபரி நீரை கால்வாய் அமைத்து இந்தப் பகுதி மக்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தி தரப்படும். நாங்கள் சொன்னதை செய்வோம், செய்வதைச் சொல்வோம்.

தர்மபுரி லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் உள்ளூர்க்காரர். அவரை வெற்றி பெறச் செய்து நாடாளுமன்றம் அனுப்புங்கள். வெளியூர்காரர்களை உள்ளே விட்டு விடாதீர்கள். ஒருமுறை நீங்கள் வாய்ப்பு அளித்தீர்கள். ஆனால் அவர் நாடாளுமன்றத்தில் வாயைத் திறக்கவில்லை. இந்த தொகுதிக்காக அவர் எதையும் பேசவில்லை. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

English summary
DMK chief MK Stalin says Dharmapuri Lok Sabha constituency people, should not allow outsider to win in the reference of PMK candidate Anbumani Ramadoss.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X