தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிளஸ் 2 ரிசல்ட்: வர வர மோசமாகும் தருமபுரி மாவட்ட தேர்ச்சி விகிதம்

Google Oneindia Tamil News

சென்னை: பிளஸ் டூ தேர்வில், தருமபுரி மாவட்டத்தில், கடந்த ஆண்டை ஒப்பிட்டால் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

பிளஸ் டூ 2ம் ஆண்டு பொதுத்தேர்வில், தருமபுரி மாவட்டம் 89.62% தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிட்டால் இது 3.17 சதவீதம் தேர்ச்சி குறைவாகும். தருமபுரி மாவட்டத்தில் மொத்தம், 158 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 20,013 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதில் 17,935 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Plus 2 Pass percentage in Dharmapuri district comes down

சைலன்டா மாணவிகளை முந்தும் மாணவர்கள்... பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சொல்வதென்ன..?சைலன்டா மாணவிகளை முந்தும் மாணவர்கள்... பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சொல்வதென்ன..?

கல்வியில் பின்தங்கிய மாவட்டம் தர்மபுரியாகும். அப்படியிருக்கும்போது, கடந்த ஆண்டைவிடவும், இந்த வருடம் அங்கு தேர்ச்சி விகிதம் மேலும் குறைந்துள்ளது என்பது கல்வியாளர்களுக்கு கவலையளிக்க கூடிய செய்தியாக உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கூடுதலாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழத்தொடங்கியுள்ளது. எந்த ஒரு மாவட்டத்திலும், தேர்ச்சி விகிதம் கூட வேண்டுமே தவிர முன்பைவிட குறைவது சரியல்ல என்பதை ஆட்சியாளர்கள் மற்றும் கல்வியாளர் கருத்தில் கொள்ள வேண்டும்.தருமபுரியின் அண்டை மாவட்டமான, சேலம் மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி, கடந்த ஆண்டு 91.52% ஆக இருந்தது.

தற்போது 90.64% என 0.88 சதவீதம் குறைந்துள்ளது.

அதேபோல் அரசுப்பள்ளி அளவில் 86.53% ஆக இருந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம், 1.24% குறைந்துள்ளது, 85.29% பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

English summary
Plus 2 Pass percentage in Dharmapuri district comes down, in this exams, says statistics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X