தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீறிப் பாய்கிறது காவிரி வெள்ளம்.. ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு மக்கள் வருவதை தவிர்க்க வேண்டுகோள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Cauvery Opened | துள்ளிகுதித்து மேட்டூர் அணையை வந்தடைந்தது காவிரி நீர்- வீடியோ

    தருமபுரி: சீறிப் பாய்ந்து வரும் காவிரி தண்ணீரால், ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்தில் பரிசல்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு பொதுமக்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    Prohibition of operating corracle at hogenakkal

    கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு அணைகளில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன.

    கடந்த 20 ஆம் தேதி வரை, இரண்டு அணைகளில் இருந்தும் விநாடிக்கு 8 ஆயிரத்து 300 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வரும் நீரின் அளவு விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

    மகிழ்ச்சியோ மகிழ்ச்சி... துள்ளிகுதித்து மேட்டூர் அணையை வந்தடைந்தது காவிரி நீர்மகிழ்ச்சியோ மகிழ்ச்சி... துள்ளிகுதித்து மேட்டூர் அணையை வந்தடைந்தது காவிரி நீர்

    மேட்டூர் அணைக்கு, நேற்று 213 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இந்தநிலையில், கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு தொடர்வதால், முன்னெச்சரிக்கையாக ஒகேனக்கலில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

    English summary
    Source: Prohibition of operating corracle at hogenakkal
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X