• search
தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ரீவைண்ட் 2020: போலீசிடம் எகிறிய மாஜி எம்பி முதல் தொப்பூர் கணவாய் மரணசாலை வரை தருமபுரி டாப் 10

Google Oneindia Tamil News

தருமபுரி: 2020 ஆம் ஆண்டு முடியப்போகிறது 2021ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. 2020ஆம் ஆண்டில் தருமபுரி மாவட்டத்தில் நிகழ்ந்த சில முக்கியமான டாப் 10 நிகழ்வுகளை சற்றே திரும்பி பார்க்கலாம். சில நினைவுகள் மறக்க முடியாதவை, அவற்றை மனதில் மறுபடியும் ரீவைண்ட் செய்து பார்க்கும் போது அவை மகிழ்ச்சியை அதிகரிக்கும். செய்திகளும், சம்பவங்களும் அப்படித்தான் அவற்றை மறுபடியும் திரும்பி நினைத்து பார்க்கும் போது சில நினைவுகள் சந்தோஷத்தையும்,சில நினைவுகள் சோகத்தையும் ஏற்படுத்தும். தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு அதிக அளவில் சோகமான சம்பவங்களே நிகழ்ந்துள்ளது.

  ரீவைண்ட் 2020... தருமபுரி டாப் 10 நிகழ்வுகள்!

  தருமபுரி மாவட்டத்தில் திமுக எம்பி செந்தில்குமார் அதிரடி காட்டி வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தர்மபுரி ஒன்றிய கவுன்சிலர்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி முறைகேடாக நடந்து கொண்டார் என்று, அவர் முன்னாலேயே சீறியுள்ளார் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி எம்பி செந்தில் குமார்.

  திமுக பெற்ற வெற்றியை தேர்தல் அதிகாரி, அதிமுக பெற்றதாக மாற்றிக் கூறியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் செந்தில் குமார் எம்.பி வாக்குவாதம் செய்யும் வீடியோவில், "சார், தபால் வாக்கு எண்ணுனதா சொல்றீங்க. எங்க தரப்பு ஏஜென்ட வச்சு அதை செஞ்சீங்களா. இப்ப நான் ஏஜென்ட கூப்பிடுறேன். அவர் முன்னாடிதான் எண்ணுணேன்னு சொல்லுங்க. அதை ப்ரூவ் பண்ணுங்க. ப்ரூவ் பண்ணி, என்னைக் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளுங்க என்று அதிரடி காட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

  காதலி மிரட்டல் வீடியோ வைரல்

  காதலி மிரட்டல் வீடியோ வைரல்

  தாலி கட்டப்போறியா இல்லை தற்கொலை செய்து கொள்ளவா என்று காதலி மிரட்டிய வீடியோ ஒன்று வைரலானது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. வங்கியில் உயரதிகாரியாக வேலை செய்த அருண் குமாருடன் காதல் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ள அவர் மறுக்கவே, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானது.

  ஆம்பன் புயல் தருமபுரி சூறாவளி காற்று மழை

  ஆம்பன் புயல் தருமபுரி சூறாவளி காற்று மழை

  ஆம்பன் புயல் காரணமாக தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் தர்மபுரியில் சின்ன பெரமனூர் பகுதியில் அடித்த சூறை காற்று குறித்த வீடியோ ஒன்றில் காற்று மிக வேகமாக சுழன்று அடித்து செல்கிறது. காற்றோடு சேர்த்து மிக தீவிரமாக மழையும் பெய்தது. இந்த வீடியோ வைரல் ஆனது

  போலீஸ் அதிகாரியை எட்டி உதைத்த மாஜி எம்பி

  போலீஸ் அதிகாரியை எட்டி உதைத்த மாஜி எம்பி

  என்னடா பண்ணுவே.. செருப்பு பிஞ்சிடும் என்று சொல்லி கொண்டே எகிறி கொண்டே வந்து, போலீஸ் அதிகாரியை தன் காலால் எட்டி உதைத்தார் முன்னாள் எம்பி அர்ஜுனன்! இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த முன்னாள் எம்பி அர்ஜுனன், தனது தோட்டத்தில் இருந்து ஓமலூர் சுங்கச்சாவடி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அந்த சுங்கச்சாவடியில் ஏராளமான போலீசார் பணியில் ஈடுபட்டிருந்திருந்தனர். அதில், சப்-இன்ஸ்பெக்டர் உட்பட சில அதிகாரிகளும் அங்கு நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த சப்-இன்ஸ்பெக்டரை முன்னாள் எம்பி அர்ஜூனன் காரில் இருந்து இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென்று கோபத்தில் கெட்ட வார்த்தையில் திட்டி கொண்டே திரும்பவும் காரில் ஏறினார் மாஜி எம்பி. இதனால் சப்-இன்ஸ்பெக்டர் வேணாம்.. மரியாதையா பேசுங்க" என்று கூறவே, அதைக்கேட்ட அர்ஜூனன் மறுபடியும் காரில் இருந்து இறங்கி கெட்ட வார்த்தையில் பேசி, சப்-இன்ஸ்பெக்டரை எட்டி உதைத்தார்.

  தலித் சிறுவனை மலம் அள்ள வைத்த கொடுமை

  தலித் சிறுவனை மலம் அள்ள வைத்த கொடுமை

  தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கூடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். பட்டியிலன வகுப்பு என்று கூறப்படும் பிரிவை சேர்ந்த அச்சிறுவன் கடந்த புதன்கிழமை அன்று இரவு இயற்கை உபாதைக்காக அருகே உள்ள வயல் பகுதிக்கு சென்றார். அந்த வயல் அதே பகுதியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ராஜசேகர் உடையதாகும். அப்போது அங்கு வந்த ராஜசேகர், '' என்னுடைய வயலில் மலம் கழிக்கிறாயா என்று அடித்ததாக தெரிகிறது. பிறகு மலத்தை கைகளால் அள்ள சொல்லியும் துன்புறுத்தியுள்ளார். கடும் மழையின் இடையில் சிறுவன் அனுபவித்த சித்திரவதை குறித்து தனது பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் ராஜசேகர் மீது பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் ராஜசேகர் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

  மீனவர் வலையில் சிக்கிய 106 கிலோ கட்லா மீன்

  மீனவர் வலையில் சிக்கிய 106 கிலோ கட்லா மீன்

  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீனவர்கள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட போது காவிரி ஆற்றில் மீன்பிடித்த ஒரு மீனவரின் வலையில் 106 கிலோ எடைகொண்ட கட்லா மீன் சிக்கியது. பொதுவாக மீனவர்கள் வலையில் அதிகப்பட்சமாக 40 கிலோ வரைதான் கிடைக்கும். ஆனால் முதல்முறையாக 106 கிலோ கட்லா மீன் பிடிப்பட்டு இருப்பது மீனவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மீனவரின் வலையில் 106 கிலோ எடையுள்ள மீன் சிக்கும் வீடியோ சமூக வலை தளத்தில் வைரலானது.

  நீட் தேர்வு மாணவர் ஆதித்யா தற்கொலை

  நீட் தேர்வு மாணவர் ஆதித்யா தற்கொலை

  நீட் தேர்வு எழுத இருந்த தருமபுரி மாணவன் ஆதித்யா என்பவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது தந்தை மணிவன்ணன் மற்றும் தாய் சித்ரா இலக்கியம்பட்டியில் குடியிருந்து வருகின்றனர். நீட் தேர்வுக்காக தயா ராகி வந்த மாணவன் திடீரென தற்கொலை செய்து கொண்டது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

  திமுக எம்பி செந்தில்குமார் ஆய்வு

  திமுக எம்பி செந்தில்குமார் ஆய்வு

  தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் செந்தில்குமார் ஆய்வுக்கு வருகிறார் என்றாலே அரசு அதிகாரிகள் வியர்த்து விறுவிறுத்துப் போகின்றனர். அந்தளவிற்கு அவர்களிடம் செந்தில்குமார் எம்.பி. கேள்விக்கணைகளை வீசி குடைந்தெடுத்து விடுவார். தனது நிதியின் மூலம் தொகுதியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித்திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்து அதில் குறைகள் இருப்பின் ஒப்பந்ததாரர்களை ஒரு வழி செய்து விடுவார். செந்தில்குமார் எம்.பி. காட்டும் அதிரடி ஆய்வுகளால் தருமபுரி மாவட்ட அரசு அதிகாரிகள் ஒரு வித பதற்றத்திலேயே இருந்து வருகின்றனர்.

  கிணற்றில் விழுந்த யானை மீட்பு

  கிணற்றில் விழுந்த யானை மீட்பு

  தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சபள்ளி சின்னாறு அணையை அடுத்த ஏலகுண்டூர் என்ற இடத்தில் தண்ணீர் குறைந்த நிலையில் கிணறு ஒன்று உள்ளது. அதிகாலையில் இந்த கிணறு வழியாக உணவு தேடி வந்த பெண் யானை கிணற்றில் விழுந்தது. யானையின் சப்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து 14 மணிநேர போராட்டத்திற்கு பின் அந்த பெண் யானை உயிருடன் மீட்கப்பட்டது.

  தொப்பூர் கணவாய் சாலை மரண சாலை

  தொப்பூர் கணவாய் சாலை மரண சாலை

  தொப்பூர் கணவாய் சாலையை லாரி ஓட்டுனர்கள் மரணசாலை என்றே அழைக்கிறார்கள். இந்த சாலையில் இதுவரை கடந்த 10 மாதத்தில் மட்டும் 36 பேர் பலியாகி உள்ளனர். இந்த சாலை போட்டதில் இருந்து இதுவரை ஏற்பட்ட விபத்துக்களை எண்ணில் அடக்க முடியாது, அந்த அளவிற்கு விபத்துக்கள் நடந்துள்ளது. சமீபத்தில் சிமெண்ட் லாரி ஒன்று வேகமாக வந்து 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர் பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தருமபுரி மாவட்டத்தில் பதைபதைப்பை ஏற்படுத்தியது.

  English summary
  2020 is going to end and 2021 is going to be born. Let’s take a look back at some of the top 10 events that took place in Dharumapuri in 2020.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X