தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுஜித் மீட்பு பணி.. நல்ல வாய்ப்பு நழுவிவிட்டது.. எம்பி செந்தில் குமார் வைக்கும் முக்கிய 9 புகார்கள்

சுஜித்தை மீட்க நடந்த தீவிர பணி தொடர்பாக தருமபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் 9 கேள்விகள் மற்றும் சந்தேகங்களை அடுக்கி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Sujith rescue operation | சுஜித் பலியானது உறுதி செய்யப்பட்டது எப்படி?

    தருமபுரி: சுஜித்தை மீட்க நடந்த தீவிர பணி தொடர்பாக தருமபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் 9 கேள்விகள் மற்றும் சந்தேகங்களை அடுக்கி இருக்கிறார்.

    கடந்த வெள்ளிக்கிழமை திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை, சேர்ந்த சுஜித் என்ற குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். அன்று மாலை இவரை மீட்கும் பணிகள் துவங்கியது. ஆனால் நேரம் செல்ல செல்ல மீட்பு பணி பல்வேறு சிக்கல்களால் தடைபட்டது.

    80 மணி நேரம் போராட்டம் தோல்வியில் முடிந்தது. இன்று அதிகாலை குழந்தை சுஜித் சடலமாக மீட்கப்பட்டார்.

    திக் திக் 80 மணி நேரம்.. ஒவ்வொரு நிமிடமும் உயிர் போய்.. கடவுளே உனக்கு இரக்கமில்லையா!திக் திக் 80 மணி நேரம்.. ஒவ்வொரு நிமிடமும் உயிர் போய்.. கடவுளே உனக்கு இரக்கமில்லையா!

    கேள்வி எழுப்பி வந்தார்

    கேள்வி எழுப்பி வந்தார்

    சுஜித் செய்தி கேட்டதும், தன்னுடைய தொகுதியில் இருக்கும் அனைத்து மூடப்படாத ஆழ்துளை கிணறுகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தருமபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் கூறி இருந்தார். அதே சமயம் மீட்பு பணியில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி வந்தார். தற்போது சுஜித்தை மீட்க நடந்த தீவிர பணி தொடர்பாக தருமபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் 9 கேள்விகள் மற்றும் சந்தேகங்களை அடுக்கி இருக்கிறார்.

    வாய்ப்பு போய்விட்டது

    எம்பி டாக்டர் செந்தில்குமார் தனது டிவிட்டில்,

    1) 26 அடியில் விழுந்த குழந்தையை மீட்பதற்கான தங்கமான வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளது.

    2) 6 முதல் 8 மணி நேரத்திற்குள் தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை வீரர்கள் அனைத்து தேவையான உபகரணங்களுடன் நான்கு வகையான திட்டங்களுடன் (plan A B C D) மீட்பு இடத்திற்கு சென்றிருக்க வேண்டும்.

    தாமதம் ஏன்?

    3) ஆனால் அவர்கள் சென்றடைய14 முதல் 16 மணி நேரம் ஆனது.

    4)திட்டம் செயலிழந்த பிறகுதான் அவர்கள் அடுத்த திட்டத்தை பற்றி சிந்தித்தார்கள்.

    5)துறை சார்ந்த நபர்களை தாண்டி அமைச்சர்கள் அங்கு செல்வதை தவிர்த்திருக்கலாம், இது அதிகாரிகளிடையே முடிவு எடுப்பதை சிரமப்படுத்தும்.

    பாதுகாப்பு முக்கியம்

    6)முக்கியமான பகுதிகள் ஊடக வெளிச்சத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டு இருக்க வேண்டும்.

    8)மீட்பு அதிகாரிகளுக்காக குறிப்பிட்ட பகுதிகள் வரையறை செய்யப்பட்டிருக்க வேண்டும். மற்றவர்கள் அங்கு செல்ல தடை செய்யப்பட்டிருக்க வேண்டும்

    9) இது உயிரை காப்பாற்றும் விஷயத்தில் மிக முக்கியமானவை ஆகிய கேள்விகள் மற்றும் புகார்களை செந்தில்குமார் வைத்து இருக்கிறார். இவரின் டிவிட் இணையத்தில் பெரிய வைரலாகி உள்ளது.

    English summary
    RIP Sujith: DMK MP Senthil Kumar asks 9 questions on the rescue mission of the Toddler.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X