• search
தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஊரே ஒன்று கூடி அழுதது... முருகனும் ஊருக்குள் வரவேயில்லை.. இப்படியும் ஜனங்களா??

|

தர்மபுரி: இந்த காலத்திலயும் இப்படியும் ஒரு கிராமம் இருக்கா? இப்படியும் ஊர் ஜனங்க இருப்பாங்களா என்று ஆச்சரியமாக உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊர் இண்டூர் கோரப்பள்ளி. இங்கு வசிப்பவர்தான் செல்வம். இவர் தன்னுடைய மகன் முருகனை பி.இ. வரை படிக்க வைத்தார். முருகனுக்கு வயசு 28 ஆகிறது.

பாஜகவிற்கு எதிராக மெகா கூட்டணி... சென்னையில் ஸ்டாலினுடன் சந்திரபாபு நாயுடு இன்று சந்திப்பு!

 ஊரைவிட்டு ஓடினர்

ஊரைவிட்டு ஓடினர்

இந்நிலையில் முருகன் ஒரு பெண்ணை காதலித்தார். அந்த பெண் வேறு சமூகத்தை சேர்ந்தவர். 20 வயது நிரம்பிய அந்த பெண்ணும் முருகன் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டார். ஆனால் வழக்கம்போல் இரு வீட்டிலும் எதிர்ப்பு.. தகராறு.. கிளம்பியது. இப்படி ஓயாமல் இரு வீட்டிலும் பிரச்சனை இருந்து கொண்டே இருந்ததால், எப்படியும் இரு வீட்டாரும் தங்களுக்கு கல்யாணம் செய்து வைக்க போவதில்லை என்ற நினைத்தனர்.

 எதிர்ப்பு அதிகமானது

எதிர்ப்பு அதிகமானது

அதற்காக இருவரும் ஊரை விட்டு ஓடிப்போய் கல்யாணமும் செய்து கொண்டார்கள். கல்யாணம் ஆனாலும் எதிர்ப்பு அதிகமானது. இப்போது இரு வீட்டாரையும் விட ஊரே கோபமாகிவிட்டது. 2 பேரையும் ஊருக்குள் எப்பவுமே சேர்க்க கூடாது என முடிவெடுத்தும் விட்டது. அதனால் எந்த சூழ்நிலையிலும், நல்லது, கெட்டது எதுவானாலும் ஊருக்குள் இந்த காதல் ஜோடி வரவே முடியாத நிலை ஏற்பட்டது.

 உயிரிழந்த செல்வம்

உயிரிழந்த செல்வம்

இந்த நேரத்தில் நேற்று முன்தினம் முருகனின் அப்பா செல்வம், திடீரென ஒரு சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். சாலை விபத்து என்பதால் உடனடியாக விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையிலிருந்து சடலம் வீட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தயாரானது.

 போலீசார் குவிப்பு

போலீசார் குவிப்பு

செல்வத்தின் சடலம் வீட்டுக்கு கொண்டு வரப்படுவதை அறிந்து ஏராளமானோர் குவிந்துவிட்டனர். அதேபோல, தந்தையின் சடலத்தை பார்க்க மகன் எப்படியும் வருவார் என்று நினைத்து இரு சமூகத்தினரும் முருகனை ஒரு கை பார்த்துவிட தயாராக இருந்தனர். முருகன் வந்ததும் இரு சமூகமும் எந்த கலவரத்தையும் ஆரம்பித்து விடக்கூடாது என்பதை அறிந்த போலீசாரும் அதிக அளவில் ஊருக்குள் குவிக்கப்பட்டனர்.

 ஊரே ஒன்றுகூடி அழுதது

ஊரே ஒன்றுகூடி அழுதது

ஒரு பக்கம் செல்வத்தின் சடலத்தை காண உறவினர்களும், முருகன் எப்போது வந்தாலும் தகராறு செய்துவிடுவது என ஊர்ஜனங்கள் ஒரு பக்கமும், எந்த நேரத்திலும் சாதி மோதல் உருவாகிவிடக்கூடாது இன்னொரு பக்கம் போலீசாரும் என குவிந்திருந்தனர். பாலக்கோடு மருத்துவமனையிலிருந்து செல்வம் உடல் வந்தது... ஊரே ஒன்று கூடி அழுதது... முருகனும் ஊருக்குள் வரவேவில்லை.. கடைசியில் அடக்கமும் செய்துவிட்டது.

 ஆஸ்பத்திரியில் முருகன்

ஆஸ்பத்திரியில் முருகன்

ஆனால் நடந்ததோ வேறு!! விஷயம் என்னவென்றால், இப்படி ஊர்ஜனமே ஒன்றுகூடி காத்திருப்பது முருகன் காதுக்கு எட்டிவிட்டது. அதனால் அப்பாவின் உடலை பார்ப்பதற்காக நேராக ஆஸ்பத்திரிக்கே போய்விட்டார் முருகன்.

 இறுதி சடங்கு

இறுதி சடங்கு

எப்படியும் ஊருக்குள் நம்மை விட மாட்டார்கள் என்பதை அறிந்த முருகன், ஆஸ்பத்திரிலேயே தன் தந்தையின் உடலுக்கு ஈமச்சடங்கு செய்தார். அப்பாவை கட்டி பிடித்து கதறி அழுதவாறே முருகன் சடங்கினை செய்தது அங்கிருந்தவர்களின் நெஞ்சை கனமாக்கியது. இந்த விஷயம் கடைசிவரை ஊருக்குள் தகராறு செய்ய காத்திருந்தவர்களுக்கு தெரியவே தெரியாது. எனினும் தற்போதும், ஊருக்குள் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தர்மபுரி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
வருடம்
வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
2019
டாக்டர்.எஸ் செந்தில் குமார் திமுக வென்றவர் 5,74,988 47% 70,753
அன்புமணி ராமதாஸ் பாமக தோற்றவர் 5,04,235 41% 70,753
2014
அன்புமணி ராமதாஸ் பாமக வென்றவர் 4,68,194 43% 77,146
மோகன் பி.எஸ் அஇஅதிமுக தோற்றவர் 3,91,048 36% 0
2009
தாமரைச்செல்வன் ஆர் திமுக வென்றவர் 3,65,812 47% 1,35,942
செந்தில். ஆர். டாக்டர் பாமக தோற்றவர் 2,29,870 30% 0
2004
செந்தில், டாக்டர் ஆர். பாமக வென்றவர் 3,97,540 56% 2,16,090
இளங்கோவன். பி. டி. பாஜக தோற்றவர் 1,81,450 26% 0
1999
இளங்கோவன், பி.டி. பாமக வென்றவர் 3,40,162 48% 25,540
முனுசாமி, கெ.பி. அஇஅதிமுக தோற்றவர் 3,14,622 44% 0
1998
பாரி மோகன் கெ. பாமக வென்றவர் 3,41,917 55% 99,427
தீர்த்தராமன் பி. டி எம் சி ( எம்) தோற்றவர் 2,42,490 39% 0
1996
தீர்த்தராமன் .பி டி எம் சி ( எம்) வென்றவர் 2,97,166 43% 1,31,246
சுப்ரமணியம் எம்.பி. காங்கிரஸ் தோற்றவர் 1,65,920 24% 0
1991
தங்க பாலு கெ.வி. காங்கிரஸ் வென்றவர் 3,22,138 51% 1,50,489
இளங்கோவன் பி.டி. பாமக தோற்றவர் 1,71,649 27% 0
1989
சேகர், எம்.ஜி. அஇஅதிமுக வென்றவர் 3,15,921 47% 1,13,020
இளங்கோவன், பி.டி. பாமக தோற்றவர் 2,02,901 30% 0
1984
எம். தம்பி துரியை அஇஅதிமுக வென்றவர் 3,33,427 63% 1,51,252
பார்வதி கிருஷ்ணன் சிபிஐ தோற்றவர் 1,82,175 35% 0
1980
அர்ஜுனன் கெ. திமுக வென்றவர் 2,09,603 56% 66,871
புவராஹான் ஜி. ஜேஎன்பி தோற்றவர் 1,42,732 38% 0
1977
ராமமூர்த்தி கெ. காங்கிரஸ் வென்றவர் 2,39,908 60% 1,05,686
பொன்னுசுவாமி பி. என்சிஓ தோற்றவர் 1,34,222 34% 0

 
 
 
English summary
Son made his final ceremony to his father in the govt. hospital near Dharmapuri

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more