• search
தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வா அசுரா வா.. நீங்கதான் திமுகவிற்கு இப்போ தேவை.. தர்மபுரி எம்பி செந்தில் குமாரை கொண்டாடும் மக்கள்!

|
  நீங்கதான் திமுகவிற்கு இப்போ தேவை.. தர்மபுரி எம்பி செந்தில் குமாரை கொண்டாடும் மக்கள்! - வீடியோ

  தர்மபுரி: திமுக தர்மபுரி எம்பி செந்தில் குமாரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானதை அடுத்து நெட்டிசன்கள் அவரை பெரிய அளவில் பாராட்டி டிவிட் செய்து வருகிறார்கள்.

  தர்மபுரி ஓன்றியம் நியூகாலனி & பழைய தர்மபுரி ஒன்றிய கவுன்சிலில் திமுக பெற்ற வெற்றியை அறிவிக்காமல் அதிமுக வென்றதாக கடைசி நேரத்தில் தேர்தல் அதிகாரி அறிவித்தார். இப்படி மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரிக்கு எதிராக தர்மபுரி திமுக எம்பி செந்தில் குமார் கடுமையாக வாதம் செய்து சண்டை போட்டுள்ளார்.

  இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. அவர் ஆக்ரோஷமாக சண்டை போடும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

  என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுங்கள்.. பார்ப்போம்.. அசுரனாக சீறிய தர்மபுரி எம்பி.. என்னாச்சு?

  தபால் வாக்கு

  தபால் வாக்கு

  தபால் வாக்குகள் வித்தியாசம் காரணமாக முடிவு மாறியதாக தேர்தல் அதிகாரி தெரிவித்து இருக்கிறார். இதற்கு எதிராக தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் கடும் கேள்விகளை எழுப்பினார். இந்த தேர்தலில் மோசமாக முறைகேடு நடந்துள்ளதாக செந்தில்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார். இவரின் வீடியோவை நெட்டிசன்கள் ஷேர் செய்து பாராட்டி வருகிறார்கள்.

  உங்கள் சக்தி

  இதுதான் உங்கள் சக்தி செந்தில் குமார். இதை போன்ற இளம் தலைவர்கள்தான் ஒரு ஜனநாயகத்திற்கு தேவை.சிறந்த அரசியல்வாதி. பல முக்கிய அரசியல்வாதிகளுக்கு இவர் சிறந்த ரோல் மாடல் என்றுள்ளார்.

  ரோல் மாடல்

  இவர் இளைஞர்களுக்கு சிறந்த ரோல் மாடலாக திகழ்கிறார். நீதிக்காக எப்போதும் போராட வேண்டும். பழைய திமுகவினரை பார்த்தது போல இருக்கிறது என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.

  தூக்கத்தை துறந்த ஸ்டாலின்... விடிய விடிய நிர்வாகிகளிடம் களநிலவரங்களை கேட்டறிந்தார்

  சினிமா காட்சி

  இந்த விவாதத்தை, இந்த நெட்டிசன், அப்படியே சினிமா பட காட்சி போல விவரித்துள்ளார். அதில், இரண்டு ரௌடிங்களுக்கு மத்தியில் ஒரு பொண்ணு மாட்டி, இனி அவ்வளவுதான்னு நெனைக்கும் போது, அந்த பொண்ணோட அண்ணே வந்தா எப்படி இருக்கும் ?

  அந்த அண்ணன் ஒரே ஆளே பத்து பேரை தூக்கி போட்டு மிதிக்கிறவரா இருந்தா, தங்கச்சி என்ன உணருமோ ?

  அப்படியான உணர்வை தந்தது, உங்களுடைய செய்கை.

  நன்றி சார், என்றுள்ளார்.

  பல வருடம்

  பெருமையுடன் வாழ்த்துக்கள், பல வருடங்களுக்கு பிறகு கிளை கழக தொண்டர்காக போராடும் ஒரு கழக பிரமுகரை காண்கிறோம்.. தொண்டனை விட்டுத்தராத தலைவரின் தளபதிகள் வீரபாண்டியார், கோ. சி. மணி வரிசையில்.., என்று இவர் புகழ்ந்துள்ளார்.

  உங்களை போன்றவர்

  இதுபோன்று நடக்கும் அதிகார அடக்குமுறைகளை எதிர்க்க, கடுமையாக விமர்சிக்க, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தான் தேவையென்றால், இனிவரும் காலம் எவ்வாறு இருக்குமோ என்று கவலை அனைவர் நெஞ்சிலும் ஆட்கொள்ளும் அல்லவா, இதுபோன்ற அடக்குமுறைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க உங்களைப் போன்றஒரு உத்தமர் தேவை, என்று இவர் பாராட்டி உள்ளார்.

  அதிகாரமாக நடக்க வேண்டும்

  சிறந்த போராளி நீங்கள்.. அதிகாரத்தில் இருப்பவர்களிடம் அதிகாரமாக தான் நடக்க வேண்டும் மக்கள் நலனுக்காக.... செம, என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.

  திமுக வென்றும் முடிவை அறிவிக்கவில்லை.. தமிழகம் முழுக்க பல இடங்களில் போராட்டம்.. பெரும் பரபரப்பு!

  அசுரன் சார்

  நாம் பார்க்கும் அசுரன், வாழ்த்துக்கள் சார் செந்தில் குமார். சமகாலத்தில் ஒரு போராளியாக இவர் இருக்கிறார், என்று இந்த நெட்டிசன் குறிப்பிட்டுள்ளார்.

   
   
   
  English summary
  Tamilnadu Local body elections: Dharmapuri MP Senthil Kumar becomes viral on Twitter after his video of him fighting with Election officials.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X