தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுங்கள்.. பார்ப்போம்.. அசுரனாக சீறிய தர்மபுரி எம்பி.. என்னாச்சு?

Google Oneindia Tamil News

தர்மபுரி: தர்மபுரி ஒன்றியம் நியூகாலனி & பழைய தர்மபுரி ஒன்றிய கவுன்சிலில் திமுக பெற்ற வெற்றியை அறிவிக்காமல் அதிமுக வென்றதாக மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரிக்கு எதிராக தர்மபுரி திமுக எம்பி கடுமையாக வாதம் செய்து சண்டை போட்டுள்ளார். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

தமிழகம் முழுக்க உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தர்மபுரி ஓன்றியம் நியூகாலனி & பழைய தர்மபுரி ஒன்றிய கவுன்சிலில் திமுக வெற்றி என அறிவித்து சற்று நேரத்தில் அதை மாற்றி அதிமுக வெற்றி அறிவித்ததாக தேர்தல் அதிகாரி மீது புகார் எழுந்துள்ளது.

தபால் வாக்குகள் வித்தியாசம் காரணமாக முடிவு மாறியதாக தேர்தல் அதிகாரி தெரிவித்து இருக்கிறார். இதற்கு எதிராக தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் கடும் கேள்விகளை எழுப்பினார்.

திமுக வென்றும் முடிவை அறிவிக்கவில்லை.. தமிழகம் முழுக்க பல இடங்களில் போராட்டம்.. பெரும் பரபரப்பு!திமுக வென்றும் முடிவை அறிவிக்கவில்லை.. தமிழகம் முழுக்க பல இடங்களில் போராட்டம்.. பெரும் பரபரப்பு!

சரமாரி கேள்வி

சரமாரி கேள்வி

இந்த தேர்தலில் மோசமாக முறைகேடு நடந்துள்ளதாக செந்தில்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார். இந்த முறைகேடு தொடர்பாக நேற்று செந்தில்குமார் தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து கடும் கேள்விகளை எழுப்பினார். தேர்தல் முடிவுகளை மாற்றியது ஏன்? தபால் வாக்குகள் குறித்து பொய் சொன்னது ஏன் என்று அவர் தேர்தல் முடிவை அறிவித்த அதிகாரியுடன் வாக்குவாதம் செய்தார்.

என்ன வாதம்

என்ன வாதம்

எம்பி செந்தில்குமார் தனது வாதத்தில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. வாக்கு எண்ணும் மையத்தின் ஏஜென்ட் சொல்கிறார். அங்கு வாக்கு எண்ணியவர்களுக்கு யார் வெற்றிபெற்றது என்று தெரிகிறது. அப்படி இருக்கும் போது நீங்கள் எப்படி முடிவை மாற்றி அறிவிக்கலாம்.

இங்கே வரட்டும்

அந்த ஏஜென்ட்டை நான் இங்கே கொண்டு வருகிறேன். அவரை வைத்துக்கொண்டு பேசலாம். அவர் சொல்வார் யார் வெற்றிபெற்றவர் என்று. அவரிடமே கேட்கலாம். நான் கேட்கிறேன் கேள்வி ரொம்ப சிம்பிள்.

தபால் வாக்கு

தபால் வாக்குகளை யார் முன்பு எண்ணினீர்கள். தபால் வாக்குகளை எண்ணவில்லை என்று, ஏஜென்ட் சொல்கிறார். நீங்கள் எண்ணியதாக கூறுகிறீர்கள். அவரை வைத்து பேசலாம் . யார் உண்மையை பேசுகிறார்கள் என்று பார்க்கலாம். நீங்கள் தபால் வாக்குகளை எண்ணாமல் எண்ணிவிட்டதாக எப்படி சொல்லாம்.

நான் ஏன் இப்படி பேச போகிறேன்

நான் ஏன் இப்படி பேச போகிறேன்

நீங்கள் சரியாக செயல்பட்டு இருந்தால் நான் ஏன் இப்படி பேச போகிறேன். நீங்கள் ஏன் டிஎஸ்பியை வைத்து எங்கள் ஆட்களை அடித்தீர்கள்.வேட்பாளரை கூட அடித்துள்ளீர்கள். நீங்கள் நியாயமான நபராக இருந்தால் என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுங்கள்.

ரூல்ஸ் பேச வேண்டாம்

நீங்கள் எங்களிடம் ரூல் பேசுகிறீர்கள். நான் இப்போது ரூல்ஸ் பேசுகிறேன். எந்த அடிப்படையில் நீங்கள் முடிவை மாற்றினீர்கள். இப்போதே எங்களுக்கு நியாயம் கிடைத்தாக வேண்டும் என்று எம்பி செந்தில் குமார் பேசி உள்ளார்.

English summary
Tamilnadu Local body elections: Dharmapuri MP Senthil Kumar fights with Election officials - Video goes viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X