தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னை மன்னிச்சுடுங்க சார்.. போலீசை கண்டதும் காலில் விழுந்து கெஞ்சிய பப்ஜி மதன்.. பரபரப்பு சம்பவம்!

Google Oneindia Tamil News

தருமபுரி: இன்று தருமபுரியில் பப்ஜி மதன் கைது செய்யப்பட்ட போது, அவர் போலீசை பார்த்ததும் கண்ணீர் விட்டு கதறி உள்ளார்.

Recommended Video

    #BREAKING யூடியூபர் மதன் கைது!

    பாலியல் ரீதியாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்கும் யூ டியூப் கேமர் மதனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். பப்ஜி மதன் தலைமறைவாகி இருந்த நிலையில் இன்று தருமபுரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்

    யூ டியூபில் லைவ் வீடியோவில் பெண்களிடம் தவறாக பேசுவது, சிறுமிகளை கெட்ட வார்த்தையில் திட்டுவது, வீடியோ எடுத்து மிரட்டுவது, பணம் பிடுங்குவது என்று இவர் அத்துமீறிய நிலையில் தற்போது போலீசார் இவரை கைது செய்துள்ளனர். சென்னை கிரைம் போலீசார் இவரை தருமபுரியில் கைது செய்துள்ளனர்.

    பப்ஜி மதன்

    பப்ஜி மதன்

    தொடக்கத்தில் இருந்தே போலீசுக்கு சவால் விட்டு வந்தவர் மதன். போலீஸ் தன்னை பிடிக்க முடியாது என்று ஆடியோக்கள் மூலம் சவால் விட்டார். தன்னை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு நிறைய ஆதரவு இருக்கிறது. போலீஸ் என்னை நெருங்க கூட முடியாது என்று சவால் விட்டு வந்தார் பப்ஜி மதன்.

    டெக்னாலஜி

    டெக்னாலஜி

    முக்கியமாக பல்வேறு சிம் கார்டுகள், பல்வேறு இமெயில் முகவரிகள் என்று டெக்னிகலாக போலீசுக்கே தண்ணி காட்டி வந்தார். கையில் நிறைய பணமும் இருந்ததால், இவர் எப்போது எங்கே செல்கிறார், யாருடன் தொடர்பில் இருக்கிறார் என்பதை கண்டுபிடிப்பது கஷ்டமாக இருந்தது. இந்த நம்பிக்கையில்தான் போலீசுக்கு திமிராக பப்ஜி மதன் சவால் விட்டு வந்தார்.

    கைது

    கைது

    இந்த நிலையில் இன்று தருமபுரியில் பப்ஜி மதன் கைது செய்யப்பட்ட போது, அவர் போலீசை பார்த்ததும் கண்ணீர் விட்டு உள்ளார். போலீஸ் காலை பிடித்து,.. என்னை மன்னிச்சுடுங்க.. என்னை கைது பண்ணாதீங்க என்று கூறி கதறி, கெஞ்சி இருக்கிறார் கேமர் பப்ஜி மதன். திமிராக சுற்றி வந்தவர், போலீசை பார்த்ததும் ஆணவம் அடங்கி, அஞ்சி நடுங்கி கெஞ்சி இருக்கிறார்.

    கெஞ்சல்

    கெஞ்சல்

    நான் எந்த தப்பும் பண்ணல என்று கதறியடி அழுது இருக்கிறார். போலீசை பார்த்ததும் முதலில் எப்படியாவது ஓடி விடலாமா என்று முயன்று இருக்கிறார். ஆனால் வீட்டின் அனைத்து பக்கங்களையும் போலீசார் சுற்றி வளைத்த காரணத்தால் எங்கேயும் செல்ல முடியாமல் மதன் போலீசிடம் சிக்கினார்.

     பரபரப்பு

    பரபரப்பு

    தருமருபுரியில் உறவுக்காரர் ஒருவர் வீட்டில் இவர் பதுங்கி இருந்தார். போலீஸ் இங்கே கும்பலாக வந்த நிலையில், அங்கு கூட்டம் கூடி பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இவருக்கு அடைக்கலம் கொடுத்த உறவினர்களிடம் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களும் கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.

    English summary
    Youtube gamer Pubg Madan begged to police not to arrest him today in Dharmapuri.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X