திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொடுமை.. சிகரெட் பழக்கத்தால் அதிருப்தி.. பேச மறுத்த நண்பன்.. குத்தி கொன்ற 14 வயசு மாணவன்

சிகரெட் பிடித்ததால் நண்பன் பேச மறுத்துள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    சிகரெட் பழக்கத்தால் அதிருப்தி.. பேச மறுத்த நண்பன்.. குத்தி கொன்ற 14 வயசு மாணவன்

    கொடைக்கானல்: 14 வயசு பையனுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது... இதனால் வருத்தப்பட்டு பேசாமல் இருந்த சக வயது நண்பனை கத்திரிக்கோலால் கிழித்தும், கிரிக்கெட் மட்டையால் தாக்கியும் கொலை செய்துள்ளதாக பகீர் தகவல் கிடைத்துள்ளது

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கால்ப் மைதானம் அருகே ஒரு பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

    இங்கு 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்தான் ஸ்ரீ ஹரி, மற்றும் கபில் ராகவேந்திரா ஆகியோர். இருவருமே ஒரே கிளாஸ்தான்.. ராஜபாளையத்தை சேர்ந்தவன் ஸ்ரீ ஹரி! ஓசூரை சேர்ந்தவன் கபில் ராகவேந்திரா! இந்த பள்ளிக்கென்று தனியாக ஒரு ஹாஸ்டலும் உண்டு. நல்ல நெருக்கமும்கூட.

    சிகரெட்

    சிகரெட்

    ஸ்ரீஹரிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இதை மற்ற டீச்சர்களும், ஹாஸ்டல் வார்டனும் கவனித்து, கண்டித்து உள்ளனர். இதன் காரணமாக அந்த மாணவனுடன், கபில் ராகவேந்திரா பேசாமல் இருந்திருக்கிறார்.. விலகியும் சென்றிருக்கிறார்.

    தகராறு

    தகராறு

    இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சாப்பிடுவதற்காக மாணவர்கள் டைனிங் ஹால் சென்றிருக்கிறார்கள். அப்போது கபில் ராகவேந்திராவை வழிமறித்த ஸ்ரீஹரி, "என் என்கூட பேச மாட்டேங்குறே.." என்று வழிமறித்து கேட்டுள்ளார். "அப்பறமா இதை பத்தி பேசிக் கொள்ளலாம்" என்று சொல்லவும், கபில் ராகவேந்திராவுக்கு ஆத்திரம் அதிகமாகி உள்ளது. கபில் ராகவேந்திராவை கத்திரிகோலால் குத்தி கிழித்து தாக்கி உள்ளான். மேலும் கிரிக்கெட் ஸ்டெம்பாலும் அவன் மண்டையிலேயே மிக மோசமாக தாக்கியும் உள்ளான்.

    நடமாட்டம்

    நடமாட்டம்

    இதில் கபில் ராகவேந்திரா ரத்த வெள்ளத்திலேயே உயிரிழந்து விட்டான். இதை பார்த்ததும் அங்கிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் திரண்டு வந்துவிட்டனர். கூச்சல் குழப்பத்தை பார்த்து பயந்துபோன ஸ்ரீஹரி, உடனடியாக ஹாஸ்டலை விட்டு வெளியேறி ஏரிச்சாலையில் நடமாடி கொண்டிருந்தான்.

    விசாரணை

    விசாரணை

    ரோந்து போலீசார் இவனை பார்த்ததும், சந்தேகத்தின் பேரில் கூப்பிட்டு விசாரிக்கவும் மாட்டிக் கொண்டான். இதையடுத்து கத்திரிகோலால் தாக்கிய மாணவனை கைது செய்த போலீசார், அவனிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கபில் ராகவேந்திராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டது. இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், கொடைக்கானல் மக்களும் பதறி போய்விட்டனர்.

    English summary
    10th standard student was killed by his classmate due to prejudice in Kodaikanal School
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X