திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண்களை கிண்டல் செய்து குடித்துவிட்டு தொல்லை.. மனநலம் பாதிக்கப்பட்டவர் கொலை! .. விசாரணையில் அம்பலம்!

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மனநலம் பாதித்த மகனை அவரது குடும்பத்தினரே கொன்றது கொடைக்கானல் மலைச்சாலையின் ஓரத்தில் வீசியது விசாரணையில் தெரியவந்தது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்- வத்தலகுண்டு பிரதான மலைச்சாலையில் கடந்த 10 ஆம் தேதி வாழைகிரி கிராமம் அருகே சாலையின் ஓரத்தில் ஒரு வனப்பகுதி உள்ளது. இங்கு ஒரு சடலம் கிடப்பதாக தாண்டிக்குடி காவல் நிலையத்தில் புகார் வந்தது.

3 நாட்களுக்கு.. ரேஷன் கடைகள் இரவு 7 மணி வரை இயங்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு3 நாட்களுக்கு.. ரேஷன் கடைகள் இரவு 7 மணி வரை இயங்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

இதையடுத்து அங்கு சென்று பார்த்ததில் அந்த சடலம் கைகள் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத நிலையில் இருந்தது. இதையடுத்து போலீஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சோதனை

சோதனை

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன. இதையடுத்து சடலம் கிடைத்த இடத்தை சுற்றியுள்ள மாவட்டங்கள், கேரளாவில் கொலையாளியை தேடி வந்தனர். கொடைக்கானல் வத்தலகுண்டு நுழைவுவாயில் சோதனை சாவடியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்யப்பட்டது.

கொடைக்கானல்

கொடைக்கானல்

அப்போது கடந்த 6ஆம் தேதி இரவு நேரத்தில் கொடைக்கானல் வத்தலகுண்டு மலைச்சாலை நுழைவுவாயில் பகுதிக்குள் அந்த கார் நுழைந்ததும் தெரியவந்தது. ஆனால் கொடைக்கானல் செல்லாமல் பாதிவழியிலேயே 3 மணி நேரத்திற்கு பிறகு இதே சோதனை சாவடி பகுதி வழியாக திண்டுக்கல்லுக்கு மீண்டும் திரும்பியது.

போலீஸாருக்கு சந்தேகம்

போலீஸாருக்கு சந்தேகம்

இதையடுத்து அந்த கார் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது காரின் பதிவு எண்ணை வைத்து புதுக்கோட்டை காவல் துறையினரை தொடர்பு கொண்ட போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அந்த கார் உரிமையாளர் ஜெகனிடம் (34) விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து அவர்தான் கொடைக்கானல் சென்று வந்து தெரியவந்தது.

செல்லத்துரை

செல்லத்துரை

இதையடுத்து ஜெகன் தனது பெற்றோர் உதவியுடன் தனது அண்ணன் செல்லத்துரை காணவில்லை என புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சந்தேகம் அடைந்த புதுக்கோட்டை போலீஸார் விரைந்து ஜெகன் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் கொலை செய்யப்பட்டவர் செல்லத்துரை (37) என்பதும் அவர் ஜெகனின் அண்ணன் என்பதும் தெரியவந்தது.

கொலை செய்ய திட்டம்

கொலை செய்ய திட்டம்

செல்லத்துரை மனவளர்ச்சி குன்றியவர் என்றும் திருமணம் ஆகாத நிலையில் அவர் தினமும் குடித்துவிட்டு பெண்களை கேலி செய்வதும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதையும் செய்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 1 ஆம் தேதி கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்து சென்ற ஜெகனிடம் அவரது தாய் ராஜம்மாள் (70), செல்லத்துரையை கொன்று விடலாம் என கூறியுள்ளார்.

3 பேர் கைது

3 பேர் கைது

இதையடுத்து செல்லத்துரைக்கு கடந்த 6ஆம் தேதி இரவு மது வாங்கி கொடுத்த குடும்பத்தினர் அவருக்கு அதிக போதை ஏற்படுத்தி சுயநினைவில்லாமல் செய்துவிட்டனர். இதையடுத்து தந்தை திவ்யநாதன் உதவியுடன் காரில் அழைத்து சென்று இரும்பு ராடால் அடித்து கொலை செய்துவிட்டு இரண்டு கைகளையும் கட்டி கொடைக்கானல் வத்தலகுண்டு சாலையில் வாழைகிரி அருகே சாலையின் ஓரத்தில் உள்ள வனப்பகுதியில் போட்டுவிட்டு அடையாளம் தெரியாமல் இருக்க முகம், உடல் மீது கற்களை வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து செல்லத்துரையின் தாய், தந்தை, சகோதரர் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

English summary
3 arrested in murder of mentally disable person in Pudukottai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X