திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓவர் ஸ்பீடு.. சென்டர் மீடியத்தை உடைத்து கொண்டு.. கார் மீது மோதி.. 5 பேர் பலி.. திண்டுக்கல்லில்!

திண்டுக்கல் அருகே நடந்த சாலை விபத்தில் 5 பேர் பலியானார்கள்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: லாரியை ஓவர் டேக் செய்ய போனார் காரில் வந்தவர்.. இதில் நிலைதடுமாறி சைக்கிளில் மோதி... சென்டர்மீடியத்தை உடைத்து எதிர்புறம் வந்து கொண்டிருந்த இன்னொரு காரில் போய் மோதிவிட்டார்.. இதில் மொத்தம் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தை அதிர வைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தும்மிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன்.. இவர் ஒரு மளிகை வியாபாரி.. 58 வயதாகிறது.

5 spot died in road accident near dindigul

மனைவி வசந்தா, தாயார் ஜெயகனி, உறவினர் செல்வமைந்தன், அவரது மனைவி ஜெயந்தால்மணி என 4 பேரையும் அழைத்து கொண்டு ஒரு கல்யாணத்துக்கு காரில் சென்றார்... சாத்தான்குளம் அருகே முதலூரில் கல்யாணம் நிகழ்வு.. காரை வெள்ளையன்தான் ஓட்டிச் சென்றார்.

இதேபோல் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் பிரகதீஷ் என்ற 26 வயது டாக்டர், தன்னுடைய பாட்டி பெரியம்மாளை அழைத்து கொண்டு காரில் ஒட்டன்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கொடைரோடு அருகே சடையாண்டி பிரிவு நான்கு வழிச்சாலையில் 2 கார்களும் எதிரெதிரே அசுர வேகத்தில் வந்தன...

இதில் பிரகதீஷ், முன்னால் லாரியை ஓவர் செய்ய முயன்றார்... அப்போது கிருஷ்ணன் என்ற 70 வயது முதியவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஓவர் ஸ்பீடில் வந்த பிரகதீஷ் சைக்கிள் மீது மோதினார். பிறகு கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் தறிகெட்டு ஓடி, நான்கு வழிச்சாலையின் சென்டர் மீடியனை உடைத்து கொண்டு.. இன்னொரு பக்கத்தில் பாய்ந்து, எதிரே வந்த வெள்ளையனின் கார் மீது பயங்கரமாக மோதியது.

5 spot died in road accident near dindigul

கண்ணிமைக்கும் நேரத்தில் படபடவென வாகனங்களை மோதியதை பார்க்கும்போது, சினிமாவில் வரும் காட்சிகள் போலவே இருந்தன... அப்படி ஒரு கோர விபத்து.. சாலையில் போய் கொண்டிருந்த பொதுமக்களும், மற்ற வாகன ஓட்டிகளும் உறைந்து நின்றனர்.. எல்லோருமே அதிர்ச்சியில் கூச்சலிட்டனர்.

இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி வெள்ளையன், ஜெயகனி, செல்வமைந்தன் ஆகிய 3 பேருமே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.. இன்னொரு காரில் வந்த பாட்டி பெரியம்மாளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய பிரகதீஷ், வசந்தா, ஜெயந்தால்மணி, சைக்கிளில் வந்த கிருஷ்ணன் ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர்.

தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.. அவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பிவைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் இறந்துவிட்டார்.. மீதமுள்ளவர்கள் உயிருக்கு போராடி வருகிறார்கள்.. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது... மாவட்ட எஸ்பி சக்திவேல் நேரில் பார்வையிட்டார்.. விபத்து தொடர் விசாரணையிலும் ஈடுபட்டுள்ளார்.

கொடைரோடு டோல்கேட்டில் நடந்த இந்த விபத்து, அங்கிருந்த சிசிடிவி கேமிராவிலும் பதிவாகி உள்ளது.. பிரகதீஷ் மேல்தான் முழு தவறும் உள்ளதாக தெரிகிறது.. முன்னால் சென்ற லாரியை ஓவர்டேக் செய்ய போய்தான்.... சைக்கிளில் வந்தவர் மீது மோதிய காட்சி காண்போரை பதற வைத்து வருகிறது.. இதில் 5 பேரும் உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன.

English summary
two cars clashed and 5 people died on the spot near kodai road junction in dindigul
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X