அந்த மனசு தான் சார் கடவுள்! பிச்சை எடுத்த பணத்தில் இலங்கைக்கு நிதியுதவி! உருகிப் போன மாவட்ட ஆட்சியர்
திண்டுக்கல் : வீதிவீதியாக யாசகம் வாங்கிய முதியவர் ஒருவர் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதியாக ரூபாய் 10 ஆயிரத்தை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
துாத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்த பூல் பாண்டியன் திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் வேலை தேடி மும்பை சென்றுள்ளார்.
அங்கு வேலை கிடைக்காததால், வேறு வழியில்லாமல் பிச்சை எடுக்க தொடங்கினார். ஊர் திரும்பிய அவரை குடும்பத்தினர் ஒதுக்கி வைத்தனர்.
அட.. இலங்கைக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிய நிவாரண மூட்டையில் என்ன எழுதியுள்ளது பார்த்தீங்களா? சூப்பர்!

யாசகர் பூல் பாண்டியன்
பூல் பாண்டியன் கடந்த நாற்பதாண்டுகளாக பிச்சை எடுக்கும் பணத்தில் பெரும்பகுதியை ஏறக்குறைய 400 பள்ளிகளுக்கு மேல் நாற்காலி, மேசைகள், குடிநீர் சுத்திகரிப்பான் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி தந்துள்ளார் .

நிதி உதவி
இதற்கிடையே கடந்த வாரம் திண்டுக்கல் வந்த பூல் பாண்டியன் திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள கோவில்களில் யாசகம் எடுத்ததில் ரூபாய் 10,000 கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பாண்டியன் தான் யாசகம் எடுத்து சேர்த்து வைத்திருந்த ரூபாய் 10 ஆயிரத்தை இலங்கை தமிழர் நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகனிடம் வழங்கினார்.

கொரோனா நிதி
கொரோனா நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா பரவல் தொடங்கிய போது மதுரை வந்த பிச்சைக்காரர் பூல் பாண்டியன் ஏற்கெனவே 12 முறை மதுரை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து பத்தாயிரம் ரூபாயை வழங்கினார்.

மக்கள் நெகிழ்ச்சி
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ள நிலையில் , முதற்கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்காக உதவ முன்வர வேண்டுமென தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததை தான் அறிந்ததாகவும், இதனையடுத்து தான் யாசகம் மூலம் பெற்ற பணத்தை வழங்கியதாகக் கூறினார்.