திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குறைந்த விலை, நிறைந்த சுவை.. குவியும் ஆர்டர்.. திண்டுக்கல் பிரியாணியை கிலோ கணக்கில் கிண்டும் பெண்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கொரோனா காலத்திலும் பெண் ஒருவர் நடத்தி வரும் பிரியாணி கடையில் தீபாவளிக்காக ஆர்டர்கள் வந்து குவிகின்றன.

பிரியாணிக்கு மயங்காதவர்கள் யாரும் உளரோ? சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சைவம் முதல் அசைவம் வரை பிரியாணியின் சுவை மாறுபட்டு நாக்கில் சுவை மொட்டுக்களை தன் வசப்படுத்துகின்றன.

அந்த வகையில் திண்டுக்கல் பிரியாணிக்கு என ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது எனலாம். திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் மோகனப்பிரியா. இவர் 25 ஆண்டுகளாக சிறிய அளவில் பிரியாணி கடை நடத்தி வந்தார். இவரது பிரியாணிக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர்.

மதுரை, திண்டுக்கல்,தேனி உள்ளிட்ட 9 மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மழை அடி தூள் மதுரை, திண்டுக்கல்,தேனி உள்ளிட்ட 9 மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மழை அடி தூள்

பிரியாணிகள்

பிரியாணிகள்

இதைத் தொடர்ந்து 4 கடைகளை புதிதாக ஆரம்பித்து நடத்தி வருகிறார். ஆம்பூர் பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி என பல ஊர்களில் விதவிதமாக தயார் செய்யப்படும் பிரியாணிகள் பிரபலம்.

திண்டுக்கல்

திண்டுக்கல்

அந்த வரிசையில் திண்டுக்கல் பிரியாணியும் உலகம் முழுவதும் பிரபலமாகும். இந்த வகை பிரியாணி சீரக சம்பா அரிசியில் தயார் செய்யப்படுகிறது. செம்மறி ஆடு, வெள்ளாட்டின் கறியை கொண்டு தயார் செய்யப்படும் இந்த பிரியாணிக்கு மக்களின் நாக்கு அடிமையாகிவிட்டது. அதற்கு காரணம் இதில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள்.

மோகன பிரியா

மோகன பிரியா

பிரியாணியை சிறப்பாக செய்து தருபவர்களுக்கு சிறந்த ஆதரவை திண்டுக்கல் மக்கள் தொடர்ந்து தந்து வந்திருக்கிறார்கள். அப்படித்தான் மோகன பிரியா செய்யும் பிரியாணிக்கும் மக்கள் அமோக ஆதரவை தருகிறார்கள். 1995ஆம் ஆண்டு சிறிய கடையாக தொடங்கிய இவருக்கு தற்போது தீபாவளிக்காக ஆர்டர்கள் குவிகின்றன.

பிரியாணி ஆர்டர்கள்

பிரியாணி ஆர்டர்கள்

இது வரை 350 கிலோ பிரியாணிக்கு ஆர்டர்கள் குவிந்து விட்டன. ஒரு படி பிரியாணியின் விலை ரூ 2800க்கு விற்கப்படுகிறது. ஆனால் மோகன பிரியாவோ ஒரு கிலோ பிரியாணியை ரூ 2200-க்கு விற்பனை செய்கிறார். காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பதை உணர்த்துகிறது.

English summary
A woman in Dindigul gets many kilos of Briyani order for Deepavali. She was started her shop in 1995.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X