திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒட்டன்சத்திரம் அருகே மது போதையில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே மது போதையில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பழையபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்(25)கட்டிடத்தில் கம்பி கட்டும் தொழிலாளி இவருடைய நண்பர்கள் கண்ணன் மற்றும் மணிகண்டன். இவர்களும் பழையபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மூன்று பேரும் நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வெரியப்பூர் பிரிவு என்ற இடத்தில் உள்ள மதுபான கடைக்கு சென்றுள்ளார்.

திருமண ஆசைகாட்டி பலமுறை உல்லாசம்.,. 10 வருசம் ஜெயில்... தேனி நீதிமன்றம் அதிரடி தீர்ப்புதிருமண ஆசைகாட்டி பலமுறை உல்லாசம்.,. 10 வருசம் ஜெயில்... தேனி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

காட்டுக்குள் கொலை

காட்டுக்குள் கொலை

மது வாங்கிக் கொண்டு மூவரும் அருகே உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று மது அருந்தி உள்ளனர் இந்நிலையில் அவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கார்த்திக் உருட்டுக்கட்டையால் அடிக்கப்பட்டு அங்கு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். கண்ணன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் கொன்றுவிட்டதாக புகார் எழுந்தது

உடலை கைப்பற்றினர்

உடலை கைப்பற்றினர்

இதுபற்றி அப்பகுதியில் சென்றவர்கள் ஒட்டன்சத்திரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஒட்டன் சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து உடலை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மேலும் சிலருக்கு தொடர்பு

மேலும் சிலருக்கு தொடர்பு

அதன்பின் ஒட்டன்சத்திரம் போலீசார் கொலை செய்த அதே ஊரை சேர்ந்த கண்ணன் மற்றும் மணிகண்டனை இரவோடு இரவாக கைது செய்தனர். இந்நிலையில் இன்று காலை கொலை செய்யப்பட்ட வரின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் இருவர் மட்டும் அவரை கொலை செய்யவில்லை என்றும் மற்றும் சிலர் சேர்ந்து கார்த்திக்கை கொலை செய்து விட்டார்கள் என்று கூறி உடலை வாங்க மறுத்து ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்

ஒட்டன்சத்தித்தில் பரபரப்பு

ஒட்டன்சத்தித்தில் பரபரப்பு

இதனால் ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி அசோகன் தலைமையில் மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் யாரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்ததின் பேரில் உடலை பெற்றோர்கள் வாங்கி தங்களுடைய சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். வாலிபர்கள் கிடையே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலையில் முடிந்த இச்சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Dindigul District police arrested two youths over A youth was beaten to death in a dispute with friends near Ottanchattaram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X