திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னடா திண்டுக்கல்லுக்கு வந்த சோதனை.. இது அதிமுகவுக்கா.. பாமகவுக்கா.. இல்லை.. நாட்டு மக்களுக்கா?

திண்டுக்கல் பிரச்சார கூட்டத்தில் நடிகர் கஞ்சா கருப்பு சர்ச்சைக்குரிய பேச்சை பேசினார்.

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் தொகுதியில் யார் பிரச்சாரம் செய்ய வந்தாலும் உளறி விடுவார்கள் போல இருக்கு!

அதிமுகவின் கோட்டையான திண்டுக்கல் தொகுதியை கோஷ்டி பூசல் காரணமாக இந்த முறை பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Actor Ganja Karuppu campaigned in Dindigul

தொகுதியை ஒதுக்கிய நாளில் இருந்தே பாமகவுக்கு திண்டுக்கல்லில் தினம் தினம் சோதனைதான்! பிரச்சாரம் செய்த புதிதில் வேட்பாளர் ஜோதிமுத்துக்கு புது சட்டை, வேட்டி எல்லாம் வாங்கி கொடுத்து ஒயிட் அண்ட் ஒயிட்-ஆக மாற்றினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

நான்தாங்க நான்தாங்க "சின்ன வீடு".. ஞாபகம் இருக்கா.. அங்க பாருங்க ஒருத்தர் சிரிக்கிறாரு.. கரூரை கலக்கிய பபிதா!

ஆனால் பிரச்சாரத்தின்போது அவரது பெயரை மாற்றி சொல்லி விட்டார். பிறகு 3 முறை மாம்பழம் சின்னம், ஆப்பிள் ஆக உருமாறியது. இந்நிலையில், கஞ்சா கருப்பு ஜோதிமுத்துவுக்கு வாக்கு திரட்ட போய் இருக்கிறார்.

Actor Ganja Karuppu campaigned in Dindigul

பிரச்சாரம் செய்துகொண்டே வந்த கஞ்சா கருப்பு திடீரென, "வேட்பாளர் ஜோதிமுத்துவை வெற்றி பெற வைத்தால் கண்டிப்பாக பழனி லட்டு தருகிறேன்" என்றார். உடனே கூட்டத்திலிருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்து விட்டனர். ஏனெனில் பழனி கோவிலில் பஞ்சாமிர்தம்தான் ரொம்ப ஃபேமஸ். கஞ்சாகருப்பு கோயில் பிரசாதத்தையே மாற்றி சொல்லிவிட்டார்.

Actor Ganja Karuppu campaigned in Dindigul

தொடர்ந்து பேசிய கஞ்சாகருப்பு, நரேந்திர மோடியை பிரதமராக்குவோம் என்பதற்கு பதிலாக "மோடியை முதல்வராக்குவோம்" என சொன்னதும் கூட்டத்தினர் அதிர்ந்தே போய்விட்டனர்.

நாளுக்கு நாள் திண்டுக்கல்லில் உளறல் சமாச்சாரங்கள் தொடர்ந்து வருவதெல்லாம் அதிமுகவுக்கு வந்த சோதனையா? பாமகவுக்கு வந்த சோதனையா? இல்லை.. நம் மக்களுக்கான சோதனையா என்றே தெரியவில்லை.

English summary
In Dindigul Meeting Actor Ganja Karuppu says PM Modi again Chief-minister and Palani Prasad is Laddu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X