திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னப்பா.. இப்படி பொசுக்குன்னு....திண்டுக்கல் சூர்யா ரசிகர்கள் பெயரில் வலம் வரும் வம்பு போஸ்டர்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: நீட் தேர்வு விவகாரத்தை முன்வைத்து நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் ஒட்டிவரும் போஸ்டர்கள் அதகளப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் நீட் தேர்வு முறையை மிக காட்டமாக விமர்சித்திருந்தார்.

கண்களில் கருப்பு துணி கட்டி நீட் தேர்வை எதிர்த்து.. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் கண்களில் கருப்பு துணி கட்டி நீட் தேர்வை எதிர்த்து.. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்

சூர்யாவுக்கு ஆதரவாக நீதிபதிகள்

சூர்யாவுக்கு ஆதரவாக நீதிபதிகள்

இதனையடுத்து நடிகர் சூர்யாவுக்கு எதிராக நீட் ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். மேலும் நீதித்துறையை விமர்சித்துவிட்டார் என கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் சூர்யாவுக்கு ஆதரவாக முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் திரண்டனர்.

அதகள போஸ்டர்கள்

அதகள போஸ்டர்கள்

அத்துடன் தமிழகத்தின் பல பகுதிகளில் சூர்யாவின் துணிச்சலான விமர்சனத்தை வரவேற்கும் வகையில் போஸ்டர்களை அடித்து ஒட்டி வருகின்றனர் அவரது ரசிகர்கள். இப்படி சூர்யா ரசிகர்கள் ஒட்டி வரும் சில போஸ்டர்கள் அரசியல் களத்தில் வம்பிழுத்துவிடுவதாகவும் இருக்கிறது.

திண்டுக்கல் சேட்டைக்கார ரசிகர்கள்

திண்டுக்கல் சேட்டைக்கார ரசிகர்கள்

சமூக வலைதளங்களில் திண்டுக்கல்லில் சூர்யா ரசிகர்களால் ஒட்டப்பட்டதாக ஒரு போஸ்டர் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த போஸ்டரில், எழுச்சி எழுந்த பின் தலைமை ஏற்பவன் தலைவன் அல்ல; எழுச்சியை ஏற்படுத்துபவனே தலைவன்!! என்கிற வாசகத்துடன் பெரிய போஸ்டரை ஒட்டி வைத்துள்ளனர்.

எதிர்வினை எப்படியோ?

எதிர்வினை எப்படியோ?

இந்த வாசகங்கள்தான் இப்போது சர்ச்சை. நீட் தேர்வுக்கு எதிராக சூர்யாவின் கருத்துகளை வலியுறுத்தி போஸ்டர்களை ஒட்டியிருந்தால் கூட சிக்கல் இல்லை. இப்படி வலிய போய் வம்பிழுத்துவிட்டிருக்கின்றனர் ரசிகர்கள். இனி அங்கிட்டு இருந்து என்ன எதிர்வினை வரப் போகுதோ?

English summary
A controversy erupts over Actor Surya Fans Poster in Dindigul.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X