India
 • search
திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக -ஓபிஎஸ் கூட்டணி! கட்சியை விட்டே தூக்கியிருக்கணும்! எடப்பாடிக்கு விஸ்வாசம் காட்டும் விஸ்வநாதன்!

Google Oneindia Tamil News

திண்டுக்கல் : திமுகவின் தூண்டுதலின் பேரிலேயே அதிமுகவிற்கு ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் தீவிர ஆதரவாளராக இருந்தவருமான நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
.
சொல்லி வைத்தார் போல் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர்களும் முக்கிய நிர்வாகிகளும் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அவர் மட்டும் போவாரா? டெல்லியில் டென்ட் அடிக்கும் எடப்பாடி டீம்.. 3 கண்டிஷன்.. 2 வாக்குறுதி! பின்னணி அவர் மட்டும் போவாரா? டெல்லியில் டென்ட் அடிக்கும் எடப்பாடி டீம்.. 3 கண்டிஷன்.. 2 வாக்குறுதி! பின்னணி

சிவி சண்முகம் ஜெயக்குமார் செல்லூர் ராஜு ஆர் பி உதயகுமார் வரிசையில் தற்போது முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருவராக இருந்தும் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவிய நத்தம் விசுவநாதன் இப்போதோ பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார்

கடும் கண்டனம்

கடும் கண்டனம்

திமுகவின் தூண்டுதலின் பேரிலேயே ஓபிஎஸ் கட்சிக்கு துரோகம் செய்கிறார் என அவரது முன்னாள் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமை பொறுப்பை ஏற்றதும் கட்சி முழுமையாக அவரது கட்டுப்பாட்டுக்குள் வரும். பொதுக்குழு கூட்ட வேண்டும் என்ற கட்சியின் முடிவை ஏற்று அதற்கு ஒப்புதலையும் அளித்தவர் பன்னீர்செல்வம். ஆனால் அதனை நடத்தக்கூடாது எனவும் சரி செய்ததும் அவர்தான். பொதுக்குழு கூட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக காவல் நிலையத்தில் புகார் அளிப்பது நீதிமன்றப் படிகளில் ஏறுவது என பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் தொண்டர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பிடியில் ஓபிஎஸ்

திமுக பிடியில் ஓபிஎஸ்

கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து கொண்டு பொது குழுவை எதிர்த்து நீதிமன்றம் செல்வது எந்த விதத்தில் நியாயம். சாதாரண தொண்டர்கள் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதிலிருந்தே கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த ஓபிஎஸ் முயற்சிப்பது தெரியவருகிறது. ஒற்றைத் தலைமைக்கு வந்தால்தான் கட்சி ஒரு முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். எம்ஜிஆர் கட்சியை உருவாக்கிய போது அது கருணாநிதிக்கு எதிரானது என மிக அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருந்தார். அதேபோல எம்ஜிஆருக்கு பிறகு கட்சி பொறுப்பினை ஏற்ற ஜெயலலிதாவும் கருணாநிதி ஒரு தீய சக்தி அவரை அரசியலில் அகற்ற வேண்டும் என கூறியே அரசியல் செய்தார்.

தொண்டர்கள் கொந்தளிப்பு

தொண்டர்கள் கொந்தளிப்பு

இந்த இரு பெரும் தலைவர்களின் கொள்கைக்கும் கோட்பாடுகளுக்கு மாறாக கட்சியை காட்டிக் கொடுக்கும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என பாராட்டுவதும் எந்த விதத்தில் நியாயம். ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் திமுகவுக்கு ஆதரவாக பேசி வருவது. கட்சி தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது நியாயப்படி பார்த்தால் அவர்கள் இருவரையும் கட்சியிலிருந்து நீக்கி இருக்க வேண்டும்.

  அதிமுக நாளிதழில் இருந்து OPS பெயர் நீக்கம்... தொடர்ந்து பறிபோகும் அதிகாரங்கள் *Politics
  அதிமுகவில் குழப்பம்

  அதிமுகவில் குழப்பம்

  இதிலிருந்தே திமுகவின் தூண்டுதலின் பேரிலேயே அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் நினைப்பது தெரிகிறது. ஆனால் அவரது எண்ணம் ஈடாகாது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவால் அல்லது ஓபிஎஸ் போன்றவர்களும் அதிமுகவை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது எடப்பாடி பழனிச்சாமி ஒற்றுமையாக பொறுப்பேற்றபின் கட்சி முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வரும்" என மிக கடுமையாக நத்தம் விஸ்வநாதன் விமர்சித்துள்ளார்.

  English summary
  Natham Viswanathan, a former minister and a staunch supporter in last ew years with OPS, has said that AIADMK co-ordinator O Panneerselvam is causing chaos at the instigation of the DMK.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X