• search
திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

பேருந்தில் சென்ற முதல்வர் டிக்கெட் எடுத்தாரா? சினிமாவில் வரும் ஹீரோ போல நடக்கிறார்! அண்ணாமலை காட்டம்

Google Oneindia Tamil News

திண்டுக்கல் : தமிழக வரலாறு தெரியாமல் திராவிட மாடல் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கர்வத்தால் பேசி வருகிறார் எனவும், இன்று காலை பேருந்தில் சென்ற முதல்வர் டிக்கெட் எடுத்தாரா என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

  திடீரென பொங்கி எழுந்த Annamalai! பின்னணி | Oneindia Tamil

  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வல்லக்குண்டாபுரம் என்ற கிராமத்தில் ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோவிலில் மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது.

  இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், " ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அரசு இயந்திரங்களை வைத்து ஏவிவிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதவாறு பல்வேறு இடையூறு செய்து வந்தார்.

  வெளியானது தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியல்.. காயத்ரி ரகுராம் பதவி பறிபோனது.. அண்ணாமலை அதிரடி வெளியானது தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியல்.. காயத்ரி ரகுராம் பதவி பறிபோனது.. அண்ணாமலை அதிரடி

  பாஜக அண்ணாமலை

  பாஜக அண்ணாமலை

  சுயம்பு மாரியம்மன் கோவில் முன்பாக சபதமாக கூறுகிறேன். 2026 ஆம் ஆண்டு வருகிற சட்டமன்ற தேர்தலில் ஆண்டவன் மனது வைத்தால் 2024 தேர்தல் நடக்கும் சக்கரபாணி மீண்டும் இங்கு எம்எல்ஏவாக இருக்க முடியாது. தன்னுடைய தகுதியை இழந்துவிட்டார் இது சபதமாக கூறுகிறேன் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் . கோவில் நிகழ்ச்சிகளில் அரசியல் பேசுவது தவறு என்பது தெரியும். ஒரு கேள்விக்கு முன்பாக அரசியலைத் தவிர்த்து விட்டு மற்ற விஷயங்களைப் பேச வேண்டும் அதுதான் மரபு என்பது தெரியும்

  ஸ்டாலின் ஆட்சி

  ஸ்டாலின் ஆட்சி

  ஸ்டாலின் ஆட்சி ஒரு வருடம் முடிந்து இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைக்கிறது. இதைப்பற்றி உங்கள் கருத்து சொல்லுங்கள் என்றார்கள். இதில் கருத்து எங்கும் இல்லை கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை விசிறி மட்டும்தான் கையில் உள்ளது மின்சாரம் இல்லாததால். லஞ்ச லாவண்யம் என்பதே பெருத்து விட்டது. லஞ்ச லாவண்யம் இல்லாமல் எந்த ஒரு அரசு பணியும் செய்யாத நிலையில் தள்ளப்பட்டு விட்டார்கள்.

  சினிமா ஹீரோ

  சினிமா ஹீரோ


  சினிமாவில் எப்படி ஹீரோ இருப்பார்களோ அதேபோல் ஸ்டாலின் அவர்களுக்கு மேக்கப் போட்டு ஒரு வருடகாலம் போட்டு விட்டார்கள். நல்ல ஒரு இளைஞராக காட்டி டீக்கடைக்கு சென்று அவர்கள் கொண்டு செல்லும் கிளாஸ்லையே அழையா விருந்தாளியாக இவரே சென்று சாப்பிட்டு சட்டப்பேரவைக்கு பேருந்தில் சென்றார். பேருந்தில் சென்றாரே டிக்கெட் எடுத்தாரா? என சந்தேகமாக உள்ளது" என்றார்.

  திராவிட மாடல் ஆட்சி

  திராவிட மாடல் ஆட்சி

  பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், " திராவிட மாடல் திராவிட மாடல் என்று இந்த அரசு கூறி வருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருக்கக்கூடிய மாநிலத்தை , யாராவது வந்து 70 ஆண்டுகாலமாக முழுத் தமிழகத்தையும் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். முதலமைச்சர் அவர்கள் கர்வத்தால் மட்டுமே திராவிட மாடல் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார் என்றால் தமிழக வரலாறு பற்றி அவருக்கு முழுமையாக தெரியவில்லை என்றுதான் அர்த்தம்.

  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி

  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி

  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் சமூகத்திற்காக மூன்று முடிச்சு போடப்பட்டுள்ளது. முதல் முடிச்சு அனைத்து மக்களையும் சமமாக பார்க்கும் தன்மை இரண்டாவது முடிச்சு. அனைத்து மக்களையும் சமமாக பார்த்தாலும் கூட சமமாக முன்னேற வேண்டும் என்பது ஒரு மாடல் மூன்றாவது முடிச்சு. அனைத்து மக்களும் சமமாக வளர வேண்டும் சமமாக அடுத்த தலைமுறையை வளர்க்க வேண்டும் என்று மூன்று முடிச்சுகள் உள்ளது என்றும் இந்த முடிச்சுகள் திமுகவில் இருக்கிறதா என்றால் அது நிச்சயமாக இல்லை

  குறுநில மன்னர்களாக குடும்பம்

  குறுநில மன்னர்களாக குடும்பம்

  குறுநில மன்னர்களாக ஒரு குடும்பம் மட்டும் வளமாக இருக்க ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதை திராவிட மாடல் என்றால் எப்படி நம் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மகனுமான சூர்யா பாஜகவில் இணைய போவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் குறித்து பேசிய அண்ணாமலை, தேசியத்தையும் ஆன்மீகத்தையும் ஏற்றுக்கொண்டு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்த யார் வேண்டுமானாலும் வந்தாலும்கூட பாரதிய ஜனதா கட்சி கதவு திறந்து கிடக்கும். இங்கு நிரந்தர தலைவர்கள் யாரும் கிடையாது. இங்கு குடும்பத் தலைவர்கள் யாரும் கிடையாது. யார் கொள்கையை ஏற்றுக் கொண்டு வந்தாலும் பாரதிய ஜனதா ஏற்றுக்கொள்ளும்" என்றார்.

  English summary
  BJP Tamil Nadu leader Annamalai has said that Tamil Nadu Chief Minister Stalin is proudly speaking as a Dravidian model without knowing the history of Tamil Nadu and whether the Chief Minister who went on the bus this morning took the ticket.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X