திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொடைக்கானலுக்கு உருவானது இன்னொரு பாதை.. 40 கிமீ சுற்றி செல்ல தேவையில்லை.. அற்புதமான அடுக்கம் பாதை!

Google Oneindia Tamil News

கொடைக்கானல்: மலைகளின் இளவரசி கொடைக்கானலுக்கு செல்ல தற்போது இரண்டு பாதைகளே பிரதானமாக உள்ளன. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வழியாக, காட்ரோடு, ஊத்து, பாதைதான் மிக முக்கியமான பாதை. அடுத்தபடியாக பழனி வழியாக பெருமாள் மலையை அடைந்து வரலாம்.

Recommended Video

    கொடைக்கானலுக்கு உருவானது இன்னொரு பாதை.. 40 கிமீ சுற்றி செல்ல தேவையில்லை.. அற்புதமான அடுக்கம் பாதை - வீடியோ

    இது தவிர இன்னொரு பாதையாக வத்தலக்குண்டுவில் இருந்து பட்டி வீரன்பட்டி, பண்ணைக்காடு வழியாக மெயின் பாதையை அடைந்த செல்லலாம். இந்த பாதை மிகவும் சுற்றிச்செல்லும் பாதையாகும். தற்போதைய நிலையில் கொடைக்கானல் செல்ல வத்தலகுண்டு காட்ரோடு பாதை மட்டுமே சிறந்ததாக உள்ளது,

    இந்த சூழலில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து கும்பக்கரை அருவி மற்றும் அடுக்கம் கிராமம் வழியாக பாதை வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. பல்லாண்டுக்கு பின் பணிகள் 90 சதவீதம் அளவுக்கு நிறைவு பெற்று பாதை பொதுமக்களால் பயன்படுத்தப்படுகிறது. தேனி மாவட்டம் வழியாக கொடைக்கானல் செல்பவர்கள் இந்த அடுக்கம் பாதை வழியாக சென்றால் 40 கிலோமீட்டர் மிச்சமாகும். பெரியகுளத்தில் இருந்து வெறும் 40 கிலோமீட்டர் தூரத்தில் கொடைக்காலை அடைய முடியும்

    95 சதவீதம் நிறைவு

    95 சதவீதம் நிறைவு

    எனினும் இந்த பாதையில் செல்ல வனத்துறை அனுமதி தேவை. 95 சதவீதமே பணிகள் நிறைந்துள்ளால் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இடையில் இரண்டு மூன்று இடங்களில் பாலங்கள் வேலை நடைபெறுகிறது. பாலங்கள் வேலை முடிந்ததும் போக்குவரத்துக்கு முழுமையாக திறக்கப்படும் என கூறப்படுகிறது.

    எம்ஜிஆர் போட்ட விதை

    எம்ஜிஆர் போட்ட விதை

    அடுக்கம் பாதை உருவான கதையை இப்போது பார்ப்போம். கடந்த 1984 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் பெரியகுளம் தொகுதியை மையம் வைத்து கொடைக்கானலுக்கு குறைந்த நேரத்தில் சென்றுவர மலைப்பகுதியில் குறிப்பாக வனப்பகுதியில் சர்வே செய்து பாதை அமைக்க உத்தரவிட்டார். ஆனால் அதன்பின் பணிகள் கிடப்பில் இருந்தது. 2006ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்துடன் இணைந்தது இதன் காரணமாக பெரியகுளத்தில் நடந்தது அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் பாதை பணிகள் தடைப்பட்டது.

    நிறைவேற்றிய ஜெயலலிதா

    நிறைவேற்றிய ஜெயலலிதா

    கடந்த 2011- 12 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஓ பன்னீர்செல்வம் பணியினை மீண்டும் துவக்க கோரிக்கை வைத்தார் இதனை ஏற்ற முதல்வர் ஜெயலலிதா இதற்காக கூடுதலாக 21 கோடியே 60 லட்சம் ரூபாயை ஒதுக்கினார். அதன் பின்னர் பணிகள் தொடங்கியது.

    பணிகள் நிறைவு

    பணிகள் நிறைவு

    இதற்கிடையே வனத்துறை போட்ட முட்டுக்கட்டை காரணமாக பணிகள் மீண்டம் தொய்வடைந்தது. ஆனால் 2014ம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் பணிகள் வேகமெடுத்தது. அடுக்கம் வரை பாதை நிறைவு பெற்ற போதிலும் சில கிலோமீட்டர் தூரம் பணிகள் நிறைவு பெறாமல் இருந்தது. இதுபற்றி அந்த பகுதியினர் துணை முதல்வர் ஓபிஎஸ்சிடம் அடுக்கம் பாதை குறித்து கோரிக்கைவைத்தனர். இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளில் பணிகள் முழு வீச்சில் நடந்தது. இதனால் தற்போது பணிகள் 95% நிறைவு பெற்றுள்ளது.

    பேருந்துவிட கோரிக்கை

    பேருந்துவிட கோரிக்கை

    இந்த பாதையை இப்போதே தேனி மாவட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்ல வெறும் சுமார் 40 கிலோமீட்டர் மட்டுமே ஆகிறது. இந்த பாதையின் முழு பணிகள் நிறைவு பெற்று பேருந்துகள் ஓட வேண்டும் என்று அடுக்கம் கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள். விரைவில் நடக்கும் என்று நம்புவோம்.

    English summary
    Another route to Kodaikanal, No need to go around 40km, Awesome adukkam route, how to reach kodaiknal with adukkam rute, read the article.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X